Share via:
நடிகை ராஷ்மிகாவின் ஆபாச வீடியோ வெளியானதை தொடர்ந்து தற்போது பிரபல நடிகையான கத்ரீனா கைபின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலில் வைத்து மார்பிங் செய்து டீப் டெக்னாலஜி மூலமாக வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலானது. இதை பார்த்து அதிர்ச்சியான நடிகை ராஷ்மிகாவும், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்களும் தங்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்நிலையில் நடிகை கத்ரீனா கைப்பின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கத்ரீனா கைப் ‘டைகர்3’ என்ற திரைப்படத்திற்காக டவல் அணிந்தபடி குளியலறையில் மற்றொரு நடிகையுடன் சண்டையிடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
அந்த டவல் அணிந்த காட்சியைத்தான் தற்போது ஏ.ஐ. மூலம் ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இதற்கு ‘டைகர்3’ படக்குழுவினரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபாசமாக சித்தரித்து வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடும் குற்றச்செயல்களுக்கு முடிவுகட்டும் வகையில், போலி வீடியோக்களை வெளியிட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

