News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரான ஆர்.எம்.வீரப்பனின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

ஜி20 மாநாட்டை தொடர்ந்து நடைபெற உள்ள விருந்தில் பங்கேற்க குடியரசுத் தலைவர் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணமானார்.

அதற்கு முன்னதாக எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பனை அவரது இல்லத்தில் சென்று நேரில் சந்தித்தார். ஆர்.எம்.வீரப்பனின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் மு.க.ஸ்டாலினுடன் சென்ற அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எம்.பி.ஜெகத்ரட்சகன் ஆகியோரும் ஆர்.எம்.வீரப்பனுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், எம்.ஜி.ஆர்.கழகத்தின் நிறுவனரும், முத்தமிழறிஞர் கலைஞர் மீது அளவற்ற மதிப்பும், அன்பும் கொண்டவருமான அண்ணன் திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்களுக்கு 98வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நம் பாசத்திற்குரிய ஆர்.எம்.வீ. அவர்கள் நூறு ஆண்டுகள் கடந்தும் முழு நலத்துடன் வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link