Share via:
உலகநாயகன் கமல்ஹாசன் தன்னோட 69வது பர்த்டேவ கொண்டாடிட்டு இருக்காரு. பிரபலங்களோட பர்த்டேன்னாலே செலபிரேஷன்தானே. அந்த வகையில சென்னையில நடிகர் கமல்ஹாசனோட பர்த்டே பார்ட்டி ரொம்பவே கிராண்டா நடந்துச்சு. இந்த பார்ட்டியில யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்கன்னு உங்களுக்கு தெரியுமா?
ஆக்டர் சூர்யா, பாலிவுட் ஆக்டர் அமீர்கான், பார்த்திபன், குஷ்பு, ரம்யாகிருஷ்ணன், சுஹாசினி, ஏ.வி.எம்.சரவணன்னு பல செலபிரிட்டீஸ் கலந்துக்கிட்டாங்க. மேலும் கமல்ஹாசனோட சேர்ந்து நடிச்ச அனுபவத்த ஷேர் பண்ணிக்கிட்ட செலபிரிட்டீஸ் அழகா செல்பிஸ் எடுத்து தங்களோட ஹேப்பிய ஷேர் பண்ணாங்க. இந்த போட்டோஸ் இப்ப சோசியல் மீடியாவுல வைரலாகிட்டு வருது. அடுத்ததா கமல்ஹாசன் நடிப்புல வெளியாகப் போற இந்தியன்2 அண்டு தக்லைப் படத்தோட அப்டேட்டோட சேர்த்து பர்த்டே பார்ட்டியும் களைகட்டிட்டு இருக்கு.

