Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2025/02/MergedImages-2025-02-07T104454.210.jpg)
இருட்டுக் கடையில்
அல்வா சாப்பிடத் தெரிந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தெரியவில்லை
என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக புகாரளித்து வருகிறார்கள். கடந்த 36 நாட்களில் 95 பாலியல்
குற்றங்கள் நடைபெற்று இருப்பதாகச் சொல்லி, பாதுகாப்பில்லாத தமிழகம் என்ற ஹேஸ்டேக்கை
அ.தி.மு.க.வினரும் பா.ஜ.க.வினரும் வைரலாக்கி வருகிறார்கள்.
சமீபத்தில் கிருஷ்ணகிரி
மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள்
மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக செய்திக்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார்
எடப்பாடி பழனிசாமி. அவர், “அரசுப்பள்ளி மாணவிக்கு, தான் படிக்கும் பள்ளிகளிலேயே
பாதுகாப்பு இல்லை என்பது வேலியே பயிரை மேய்கின்ற செயல், ஸ்டாலின் மாடல் திமுக அரசே
இக்கொடுரமானச் செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், கோவை
– திருப்பதி இடையே சென்றுக்கொண்டிருந்த ரயிலில்,
கர்ப்பிணி பெண்ணுக்கு இருவர் பாலியல் தொல்லை
அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட
முயற்சி செய்ததால் ரயிலில் இருந்து
கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்திக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது
குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘’தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக
சாலையில் நடந்து செல்ல முடியவில்லை;
பள்ளி, கல்லூரிகளுக்கு, பணியிடங்களுக்கு செல்ல முடியவில்லை; தற்போது
ரயிலில் கூட பயணிக்க முடியவில்லை
என்ற நிலை வந்திருப்பது வெட்கக்கேட்டின்
உச்சம். ஸ்டாலின்
மாடல் திமுக அரசு பெண்களின் பாதுகாப்பில்
கடுகளவு கூட கவனம் செலுத்தாததன்
நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்வதாகும்.
கர்ப்பிணி பெண் என்று கூட
பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள
, வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது மிகக்
கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்’’
என்று வலியுறுத்தியிருக்கிறார்.
அதேநேரம் தி.மு.க.வினர்,
‘’ஸ்டாலினை நோக்கி கேட்கும் இதே கேள்வியை ரயில்வேயை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்றிய அரசை நோக்கி கேட்க தெம்பு உண்டா?
திராணி உண்டா?
முதுகெலும்பு உண்டா?’
என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறார்கள்.
கேள்வி கேட்டுக்கிட்டு
இருக்காமல் மக்களைக் காப்பாத்துங்கப்பா.