Share via:
கொரோனா வைரசை விட 7 மடங்கு வீரியமிக்க ‘எக்ஸ்’ என்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில் 5 கோடி பேர் உயிரிழக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 70 லட்சம் பேரை பலி வாங்கியது. கொரோனா தொற்று காரணமாக மக்கள் தங்களின் உயிரை இழந்தும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அவதிப்பட்டனர்.
கொரோனா தொற்று ஓய்ந்து பொது மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டு வரும் வேளையில் தற்போது புதிய பூதம் ஒன்று கிளம்பியுள்ளது.
கொரோனா வைரசை விட 7 மடங்கு வீரியமிக்க ‘எக்ஸ்’ என்ற வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் நிபுணரான டேம் கேட் பிங்காம் கூறும்போது, ‘‘விலங்குகளிடம் இருந்து மனிதர்களுககு புரவக்கூடிய புதிய வகை வைரஸ்கள் குறித்த ஆய்வின் போது ‘எக்ஸ்’ என்ற புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவினால் குறைந்தபட்சம் 5 கோடி மக்கள் உயிரிழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் இந்த தொற்று நோயை சமாளிப்பது பெரிய சவாலாக இருக்கும் என்றும் இதை எதிர்த்து போராடுவதற்கான தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
எனவே உலக மக்கள் மறுபடியும் ஒரு பேரிடரை சந்திக்க நேரிடும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், முன்னெச்சரிக்கையுடனும், சமூக பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.