Share via:
5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் 17ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மற்ற 4 மாநிலங்களுக்குமான பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைய உள்ளது.
மத்தியபிரதேசத்தில் பா.ஜனதாவும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கரில் காங்கிரசும், தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சியும் நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து 5 மாநிலங்களுக்கும் ஒட்டுமொத்தமாக சட்டசபை தேர்தலை நடத்தி முடித்திட தேர்தல் ஆணையம் முடிவு செய்து ஆய்வுப்பணிகளை அந்தந்த மாநிலங்களில் நடத்தி முடித்துள்ளன.
அதைத்தொடர்ந்து காவல் மற்றும் பொது செலவின தேர்தல் பார்வையாளர்களின் ஆலோசனைப்படி தேர்தல் வியூகங்களை தேர்தல் ஆணையம் வகுக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார
அதன்படி ராஜஸ்தான் மாநிலத்திற்கு நவம்பர் 23ம் தேதியும், மத்தியபிரதேசத்திற்கு நவம்பர் 17ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் மிசோரம் மாநிலத்திற்கு நவம்பர் 7ம் தேதியும், சத்தீஸ்கரில் நவம்பர் 7ம் தேதி தொடங்கி நவம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. தெலங்கானாவை பொறுத்த வரையில் நவம்பர் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தியா கூட்டணி, ஒரே நாடு ஒரே தேர்தல் என பல்வேறு அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் 5 மாநில தேர்தல் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.