News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அதாவது மிகச்சரியாக 97,37,832 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டை விட கிட்டத்தட்ட 40% மக்கள் தொகை அதிகம் கொண்ட பீகார் மாநிலத்தில் மொத்தமே 65 லட்சம் வாக்காளர்கள் தான் நீக்கப்பட்டு இருந்தார்கள். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக  1 கோடி பேர் நீக்கம் என்பது திமுகவுக்கு மிகப்பெரும் சிக்கல் என்கிறார்கள்.

இது குறித்துப் பேசும் அரசியல் ஆர்வலர்கள், ‘’தமிழ்நாட்டில் மொத்தம் நீக்கப்பட்ட வாக்காளர்கள்: 97,37,832. இதில் உயிரிழந்தவர்கள்: 26,94,672 என்றும் இரட்டைப் பதிவு எனப்படும் டபுள் எண்ட்ரி 3,39,278 என்றும் கூறுகிறார்கள்.

இதையடுத்து இடமாற்றம் மற்றும் கண்டறியப்படாதவர்கள் என்று 66,44,881 லட்சம் பேரைக் குறிப்பிட்டு பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். யார் இந்த 66 லட்சம் பேர் என்பதுதான் கேள்வியாகவும் திமுகவுக்கு சவாலாகவும் இருக்கும் என்கிறார்கள்.

ஏனென்றால் இவர்கள் எல்லாம் கடந்த தேர்தலில் வாக்களித்தவர்கள். இப்போது  இந்த 66 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டால், இதுவரை இவர்கள் போட்ட ஓட்டுகளுக்கு என்ன அர்த்தம்..? இப்படி நீக்கப்பட்டவர்களை இனி மீண்டும் இணைப்பது சாத்தியமில்லாத விஷயம். இந்த பட்டியலுடன் தேர்தல் நடப்பது நிச்சயம் ஆளும் கட்சிக்கு சவாலாகவே இருக்கும்’’ என்கிறார்கள்.

இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதுடன் நில்லாமல் தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75,035-ஆக அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் என்ற கணக்கில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.

 

 

 

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், ‘’தற்போது உள்ள வாக்காளர்களில் பெண் வாக்காளர்கள்: சுமார் 2.77 கோடி, ஆண் வாக்காளர்கள்: சுமார் 2.66 கோடி, மூன்றாம் பாலினம்: 7,19, மாற்றுத் திறனாளிகள்: சுமார் 4.19 லட்சம்

அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட தகவலின்படி, சென்னையில் 35.58% வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு 40.04 லட்சம் வாக்காளர்கள் சென்னையில் இருந்த நிலையில், தற்போதைய வரைவுப் பட்டியலில் 25.79 லட்சம் பெயர்களே உள்ளன. மொத்தம் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன…’’ என்று தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் மூன்று முறை சென்று விசாரணை மேற்கொண்டு அதன் அடிப்படையிலேயே வரைவுப் பட்டியலை உருவாக்கியுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். மேலும், பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என்று ஆட்சேபங்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18 வரை தெரிவிக்கலாம். அதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இடம் மாறியவர்கள் படிவம் 8, புதிதாகப் பெயர் சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகிய படிவங்களைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்..’’ என்று தெரிவித்துள்ளார்.

நாம் பூர்த்தி செய்து கொடுத்த படிவத்தின் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள, வரைவு வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்க்க தயாராக வேண்டும்.

https://voters.eci.gov.in/ என்கிற தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரிக்குச் சென்று “Fill enumeration form” என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

அதில் மொபைல் எண் மற்றும் ஓடிபி-யை (OTP) உள்ளீடு செய்த பிறகு தோன்றும் பக்கத்தில் மாநிலத்தை தேர்வு செய்து உங்கள் எபிக் (EPIC) எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.அதன் பிறகு நீங்கள் சமர்ப்பித்த கணக்கீட்டுப் படிவம் பதிவேற்றப்பட்டதா என்பது திரையில் தெரிந்துவிடும்.

தேர்தல் ஆணைய இணைய தளத்திற்குள் சென்று, மாநிலம், மாவட்டம், தொகுதி ஆகியவற்றை தேர்வு செய்வதன் மூலமாகவும், மொபைல் எண்ணை பதிவு செய்து, நமது வாக்காளர் அட்டை (EPIC) எண்ணை உள்ளீடு செய்வதன் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இந்த வரைவு பட்டியலை அதிமுக வரவேற்றுள்ள நிலையில், திமுகவினர் அமைதி காக்கிறார்கள். முழுமையாகப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்து நிற்கிறார்கள். பாஜக திருவிளையாடல் என்று ஸ்டாலின் அதிர்ந்து நிற்கிறார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link