Share via:
தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 9000 கன அடி நீர் தண்ணீர்
திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையை ஏற்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம்
உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதையும் கர்நாடக அரசு ஏற்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
இந்த நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கு தமிழக முதல்வர் விஜய்
செப்டம்பர் 1ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.
ஆனந்த், ’’தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவின்படி, வரும் 01.09.2026 முதல்
45 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காலத்தில் காவிரி படுகையில் போதிய மழை இல்லாத
நிலையிலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த அதிரடி நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனம் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய குடிநீர்த் தேவைகளை
கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என அறிவிப்பு கொடுத்துள்ளார்.
விஜய் நேரில் வந்து திறந்து வைக்க இருப்பதாக கூறப்படுவதால், மேட்டூர்
அணையின் வலது கரையில் விழா மேடை அமைக்கப்பட உள்ள இடம், மேல்மட்ட மதகில் மின் விசையை
இயக்கும் இடம், அணை பூங்கா உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் மேற்கு
மண்டல ஐஜி ரம்யா பாரதி தலைமையில் சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமணி, எஸ்பி குத்தாலிங்கம் ஆகியோர்
ஆய்வு செய்தனர்.
மேலும், முதல்வரின் பாதுகாப்பு பிரிவு போலீஸாரும் அணையின் வலதுகரை,
இடது கரை, 16 கண் மதகு, நிகழ்ச்சி நடக்கும் இடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டனர். அணையில் இருந்து தண்ணீர் செல்லும் பகுதிகளில் உள்ள புற்கள், கழிவுகள்
உள்ளிட்டவை அகற்றும் பணியும் நடந்து வருகிறது. மேட்டூர் பகுதியில் சாலையோரம் உள்ள புற்கள்
அகற்றும் பணி, சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர்கள் உள்ளிட்டவை புதுப்பிக்கும் பணியும்
தீவிரமாக நடந்து வருகிறது.
அதேநேரம், விவசாயிகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சம்பா பயிர்
விளைவிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
