Share via:
பாலியல் குற்றச்சாட்டுகள் மீது அதிரடி விசாரணை நடத்தப்பட வேண்டும்
என்று அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் ஈஷா யோகா மையம் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்
குறித்து நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் உத்தரவிடாத மர்மம் என்ன… பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு
வீதியில் நின்று போராடும் பா.ஜ.க.வினர் இதற்கு அமைதியாக இருப்பது ஏன் என்று மக்கள்
கேள்வி கேட்கிறார்கள்.
ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா ஹோம் ஸ்கூலின் முன்னாள் ஆசிரியை யாமினி
ரகானி மற்றும் அவரது கணவர் சத்ய என் ரகானி ஆகியோர் ஹைதராபாத்தில் செய்தியாளர்களை
சந்தித்து ஆடியோ ஆதாரத்துடன் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியிருக்கிறார்கள். அவர்கள்
பேசிய போது, ’’ஈஷா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை
செய்யப்பட்டனர் மேலும் அவர்களின் ஆண் குழந்தை மற்றும் அவர்களின் நண்பரின் பெண் குழந்தை
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகினர்’’ என்று கூறியது மட்டுமின்றி பேட்டியின் போது
பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் பேசிய ஆடியோவை வெளியிட்டார்கள்.
அந்த ஆடியோவில், ‘’’நாங்கள் ஏழு ஆண்டுகளாக ஜக்கி வாசுதேவிற்கு
தொண்டர்களாக இருந்தோம். எங்கள் பெண் குழந்தையை ஈஷா வீட்டுப் பள்ளியில் சேர்த்தோம்.
நாங்கள் ஜக்கி பாபாவை கடவுளாக நம்பினோம், முழு நம்பிக்கையுடனும் நம்பிக்கையுடனும் சேவை
செய்தோம் ஆனால் அவரும் அவருடைய அறக்கட்டளையும்
எங்கள் மகளின் வாழ்க்கையை கெடுத்துவிட்டனர் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா பள்ளியில் வீட்டுப்
பள்ளி ஆசிரியரால் எங்கள் மகள் பலமுறை கற்பழிக்கப்பட்டாள். எங்கள் மகள் இரண்டு முறை
தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள்’’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
இது தவிர ஈஷா யோகா மையத்தில் இளம் பெண்களை டாப்லஸ் நிலையில் யோகா
செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும், பெண் பிள்ளைகள் குளிக்கும் நேரத்தில் பாத்
ரூம் கதவு திறந்தே இருக்க வேண்டும் என்றும் உத்தரவு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதில் மத்திய, மாநில அரசுகள் சிறப்பு விசாரணை நடத்தி அரசு இதில்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை யாமினி ரகானி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
ஈஷா யோகா மையம் என்பது மோடி அரசு ஆதரவு பெற்றது என்பதை நாடே அறியும். எனவே, மத்திய
அரசு இதில் எதுவும் செய்யாது. நித்தியானந்தா ஸ்டைலில் வேடிக்கையே பார்க்கும்.
ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கை. நிறைவேற்றுவாரா
ஸ்டாலின்..?