Share via:

தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று கட்சிக்கு பேர் வைத்துக்கொண்டு,
பிரேமலதா செய்யும் காரியங்கள் பயங்கரமாக இருக்கின்றன. விஜயகாந்த் மரணத்துக்குப் பிறகு,
அவரது கட்சி அலுவலகத்தை கேப்டன் ஆலயம் என்று பெயர் மாற்றினார். இதையடுத்து நாள் தோறும்
அங்கு வரும் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில், கேப்டன் ஆலயத்தில் விஜய்காந்த் பக்தர்கள் அலகு
குத்தி காவடி எடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினார்கள் என்று பிரேமலதா இன்று பதிவு
போட்டிருக்கிறார்கள். விஜயகாந்த்தை கடவுளாக மாற்றியிருக்கும் பிரேமலதா, ரசிகர்களை வம்படியாக
அலகு குத்துவதற்கும் காவடி எடுப்பதற்கும் தூண்டுகிறாராம்.
மற்ற ரசிகர்களை இப்படி பாடாய் படுத்தும் பிரேமலதா அவரே அலகு குத்திக்
கொள்ளலாம். அவரது பிள்ளைகளுக்கும் அலகு குத்தலாம். அதை விட்டுவிட்டு, தொண்டர்களை மட்டும்
கொடுமைப்படுத்துவது நியாயமா என்று கேட்கிறார்கள்.
ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாது போலிருக்கிறதே.