Share via:
ஹால் டிக்கெட்டில் ஏற்பட்ட குளறுபடிகளால் இன்று நடைபெறவிருந்த
குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. பல ஊர்களில் தேர்வு எழுதிக்
கொண்டிருந்தவர்கள் பாதியில் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
இந்த தேர்வுக்கு தயாராவதற்காக அவர்கள் போட்ட உழைப்பு வீணாகியிருக்கிறது.
இன்னொரு முறை தேர்வுக்குத் தயாராக பொருளாதார ரீதியாக, உடலளவில், மனதளவில் நிறைய உழைப்பு
தேவைப்படும். பல்லாயிரம் பேரின் நேரம் வீணாகும். எல்லோருடைய ஒரு நாளின் விலையும் ஒன்றல்ல.
ஸ்டாலின் அரசின் தவறுக்கு தேர்வர்கள் பாதிக்கப்படுவது அநியாயம் என்று இளைஞர்கள் கொதிக்கிறார்கள்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி, ‘’தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு
மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில்
“நிர்வாகம்” என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை , இந்த ஒரு நிகழ்வே
வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே
இதுவே முதல் முறை. அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தெரியாமல்
தேர்வு எழுதியுள்ளனர் என்ற பேரதிர்ச்சியான செய்திகளும் வருகின்றன, டெக்னிக்கல் ஃபால்ட்
என ஒற்றை வரியில் தப்பிக்க முயலுகின்ற திமுக ஆட்சியாளர்கள் , குரூப்- 2 என்பது எவ்வளவு
முக்கியமான தேர்வு?
தேர்வெழுதிய இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பும் நம்பிக்கையும்
சிதைந்துள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள் தமிழ்நாட்டை “சூப்பர்ஸ்டார்” மாநிலமாக
மாற்றிவிட்டதாக வாய்கிழிய மேடையில் பேசும் பொம்மை முதல்வர் அவர்களே – ஒரு தேர்வைக்
கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத கையாலாகாத அரசு தான் உங்கள் திமுக அரசு. ஏற்கனவே
5.5 லட்சம் வேலைகளைத் தரப்போகிறோம் என 2021-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எல்லாம்
காற்றில் பறந்துக்கொண்டு இருக்க, இருக்கின்ற தேர்வுகளைக் கூட ஒழுங்காக நடத்த வக்கற்ற
திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2ஏ தேர்வு குளறுபடிகளை அதிகாரிகள்
மீது மட்டும் சுமத்தி , அவர்கள் மீது மட்டும் கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல் , இந்த
தவறுகள் எதிர்காலத்தில் வராமல் இருக்க முறையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க ஸ்டாலின்
மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். தேர்வர்கள் அனைவரும் நம்பிக்கையோடு முயற்சிகளை
தொடருங்கள்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இப்படி பண்றீங்களேம்மா
