Share via:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்
நீதி கேட்டு போராட வந்த சீமான் கைது செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் வருண்குமார்
பற்றி பேசிய விவகாரம் பற்றி எரிகிறது. முன்னதாக தன்னிடம் சமாதானம் பேச சீமான் விரும்பியதாகவும்,
அதை ஏற்கப்போவதில்லை என்றும் வருண்குமார் பேசியிருந்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் கேட்டது, ‘’திமுக ஐடி விங்கிற்கு
ஆடியோ திருடி கொடுக்குற எடுபுடி வருண்குமார்… நீயெல்லாம் அவ்வளவு பெரிய அப்பாடக்கர்
இல்லையே நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்க… நான் மன்னிப்பு கேட்கிறேனு சொன்னேனா..?.. நீ
தான என்கிட்ட கெஞ்சின..? அந்த தொழிலதிபரை கூட்டிட்டு வா.. உன்னால் என்னை என்ன பண்ண
முடியும்..? நீதான் பத்திரிகையாளர், அதிகாரிகள் மூலம் சமாதானம் பேசினே, நான் முடியாதுன்னு
எழுந்திருச்சி வந்துட்டேன். மன்னிப்பு என்பது என் வரலாற்றிலேயே கிடையாது.
வருண்குமார் தான் துப்பாக்கி, பட்டாலியன் எல்லாம் வைச்சிருக்காரே,
எனக்குப் பாதுகாப்பு இல்லை என்று சொல்வதற்குக் கேவலமாக இல்லையா. சரியான ஆண் மகனாக இருந்தால்
எனக்குத் தண்டனை கொடு, பார்த்துக்கலாம். இந்த அரசு என்னுடன் மோதத் துப்பில்லாமல் உன்னை
வைத்து எல்லாம் செய்கிறது.
ஹனிமூன் போற மாதிரி பொண்டாட்டிக்கும், புருஷனுக்கும் பக்கத்து
மாவட்டங்களில் போஸ்டிங் போடும்போதே தெரியவில்லையா? தி.மு.க. மாவட்டச் செயலாளர் போல்
பேட்டி கொடுக்கிறாய்? டிஐஜி பதவியை விட்டுவிட்டு அந்த கட்சியில் போய் பதவி வாங்கிக்கொள்’’
என்றெல்லாம் சீமான் அதிரடி கிளப்பியிருக்கிறார்.
இதையடுத்து சீமானின் ஆதரவாளர்கள், ‘’அண்ணன் சீமான் குறித்து பொதுவெளியில்
பொய்யான தகவல்களை பரப்பி இருக்கிறார் ! தொழிலதிபர் மூலமாக அண்ணன் சீமான் அவர்கள் தனக்கு
செய்தி அனுப்பியதாக சொல்லும் வருண்குமார் ,யார் அந்த தொழிலதிபர் என்பதைச் சொல்வாரா
? மைக் கிடைத்தால் என்ன வேண்டுமென்றாலும் பேசுவீங்களா வருண் ? நாம்தமிழர் கட்சிக்கும்
உங்களுக்கும் மோதல் என சொல்றீங்க ?
36 லட்சம் மக்களால் வாக்கு செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாநில
கட்சி மாவட்ட கண்காணிப்பாளரை எதற்கு எதிர்க்க வேண்டும் ? உங்களின் பொய் வழக்குகளும்
வழக்கின் போது பறிக்கப்பட்ட அலைபேசிகளை வைத்து நீங்கள் செய்யும் மூன்றாம் தர வேலைகளையும்
பொது சமூகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது ! நீங்கள் போன அதே நீதிமன்றத்தில் நீங்கள்
எங்களுக்கு எதிராக செய்த மூன்றாம் தர வேலைகளை ஆதாரத்துடன் ஆவணப்படுத்துகிறோம்’’ என்று
குஷியாகிறோம்.
அதேநேரம் தி.மு.க.வினர், ‘’ஒரு ஐ.பி.எஸ் படித்த காவல் துறை அதிகாரியை
இப்படி கீழ்த்தரமாக பேசும் அளவிற்கு சீமானுக்கு துணிச்சல் வர ஒரே காரணம் மத்தியில்
பாஜக ஆட்சியில் இருப்பதால் தான். திமுகவை யார் எதிர்த்தாலும் அவர்களை பாதுகாக்கும்
அரணாக பாஜக உள்ளது. ஜனநாயகத்திற்கு இது சரியில்லை. நீதிமன்றம் தானாக முன் வந்து சீமானை
வன்மையாக கண்டிக்க வேண்டும்…’’ என்று குரல் எழுப்பிவருகிறார்கள்.