News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.பி.கந்தன் தற்போது அ.தி.மு.க.வில் சென்னை புறநகர் மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவர் மகனும் அ.தி.மு.க. கவுன்சிலருமான கே.பி.கே.சதீஷ்குமாருக்கும் மருத்துவரான ஸ்ருதி பிரியதர்ஷினிக்கும் கடந்த 2018ம் நடைபெற்றது.


இந்த நிலையில் கே.பி.கந்தன் குடும்பத்தினர் தனது மகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக ஸ்ருதியின் தந்தை ஆவடி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், “திருமணத்தின் போது மகளுக்கு 500 பவுன், மருமகனுக்கு 100 பவுன் தங்க நகைகளும், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள், 20 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக தந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குழந்தை பிறந்த பிறகு எனது மகள் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். விவகாரத்து கேட்டு மகளின் கணவர் வழக்கும் தொடர்ந்து உள்ளார். என் மகள் சேர்ந்து வாழ வேண்டும் என்பதால் அமைதியாக இருந்தேன். இன்னும் 500 சவரன் நகை தர வேண்டும் என்றும், சதிஷ் குமார் வியாபாரத்திற்கு 10 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் அப்போதுதான் சேர்ந்து வாழ முடியும் என்று கே.பி.கந்தன் மிரட்டல் விடுத்தார். ஆகவே, கே.பி.கந்தன், சதீஷ்குமார் உள்ளிட்டோர் மீது வரதட்சணை கொடுமை பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி இருந்தார்.

தமிழ்கம் முழுக்க இந்த விவகாரம் பெரும் சலசலப்பு ஏற்படுத்திய நிலையில் கே.பி.கந்தன் மகன் சதீஷ் குமார் டிஜிபி அலுவலகத்தில் சுருதி மீது புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ்குமார், “2022ஆம் ஆண்டு நான் விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கு ஒன்றரை வருடங்களுக்கு மேல் நடந்து வருகிறது. ஆனால், இரண்டு வருடங்கள் கழித்து என் மீது பொய் தகவலை ஸ்ருதி பரப்பி வருகிறார். தூண்டுதலின் காரணமாக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் புகாரை அளித்துள்ளார் எங்கள் குடும்பத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவலை நீக்கச் சொல்லியுள்ளோம். நீக்குவதாக காவல் துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

என் மனைவிக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததால் விவாகரத்து கோரி விண்ணப்பித்தேன். நாளை வழக்கு விசாரணை வருகிறது. வழக்கு எனக்கு சாதகமாக இருப்பதால் இப்படியான புகாரை அளித்துள்ளனர். 1000 சவரன் நகை கேட்டோம் என்பதில் எல்லாம் எந்த உண்மையும் கிடையாது. வரதட்சணை நாங்கள் கேட்கவும் இல்லை.. பெறவும் இல்லை. அவர்களிடம் அதற்கான எந்தவொரு ஆதாரமும் கிடையாது. அப்படி இருக்கும் பட்சத்தில் நான் ஏன் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும்’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link