Share via:
நகர்ப்புற மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த மகளிருக்கு ரூ.125.50 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் இணைப்பை அமைச்சர் உதயநிதி வழங்கி அவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்
சென்னை வாலாஜாரோட்டில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கில் இன்று (டிச.23) சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 1,827 நகர்ப்புர மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 23,472 சகோதரிகளுக்கு ரூ.125.50 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்பை வழங்கினார். அதைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி, மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த மகளிர் முன்னிலையில் உரை நிகழ்த்தினார்.
அவர்பேசும் போது, ‘‘மகளிர் முன்னேற்றத்துக்கு கழக அரசு என்றென்றும் துணை நின்று வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சென்னை, – காஞ்சிபுரம்,- திருவள்ளூர், – செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 1,827 நகர்ப்புற மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 23,472 சகோதரிகளுக்கு ரூ.125.50 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்பை இன்று வழங்கினோம். இந்த கடனுதவி மகளிர் வாழ்வில் ஒளியேற்றட்டும். இதன் மூலம் தொழில் முனைவோராக, சாதனையாளராக சாதிக்க மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளுக்கு என் வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.