Share via:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 14.12.2023 அன்று நந்தனம் ஒய்எம்.சி.ஏ. திடலில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு கழக மகளிர் அணி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு முத்தமிழ் அறிஞர் அவர்களின் சிலையினை நியூ பரிசாக வழங்கினார்.
மேலும் மகளிர் உரிமை மாநாட்டில் தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்- மகளிர் உரிமை மாநாட்டில் பிரியங்கா காந்தியின் தமிழ் பேச்சு
பின்னர் மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறியது
இந்தியாவின் மகனான கருணாநிதியின் சாதனைகளை நினைவுகூர இங்கு கூடியுள்ளோம்
வாழ்நாள் முழுதும் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் கருணாநிதி – சோனியா காந்தி
மாநிலம், மொழி, சாதி, மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனுக்கு சிந்தித்தவர் கருணாநிதி
அறிவியல், விளையாட்டு என்று பல்வேறு துறைகளில் இப்போது மகளிர் சாதித்து வருகிறார்கள்
பெண்ணுக்கு கல்வி கற்று கொடுத்தால், ஒரு குடும்பத்திற்கே கல்வி கற்று தரப்படுகிறது
காந்தியின் அறவழி போராட்டம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தது
இந்திரா காந்தியின் தலைமை பண்பு, பெண் எப்படி தலைமை ஏற்று செயல்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு
பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்ற வரலாற்று சிறப்பு மிக்க சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார் ராஜீவ்காந்தி
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நமது தொடர் போராட்டத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது
இருப்பினும், அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பதில் அனைவருக்கும் குழப்பும் இருக்கிறது
“இந்தியா” கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த சட்டம் அமலுக்கு வரும்
அண்ணா, கருணாநிதி செயல்படுத்திய திட்டங்கள் பெண்கள் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவ்விழாவில் எடுத்த அரிய புகைப்படங்கள் இதோ