Share via:
தமிழக பெண்களுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கிவருவதை
தி.மு.க.வின் சாதனையாக சொல்லிவருகிறது. இந்த நிலையில் மாதம் ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டா
மக்கள் ஓட்டு போடுவாங்களா என்று குஷ்பு கூறியது பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.
போதைப் பொருள் எதிர்ப்பு போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம்
பேசிய பாஜக நிர்வாகியும், தேசிய
மகளிரணி ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பூ, ‘ தமிழ்நாட்டில் போதைப்பொருள் பிரச்சினை தலைவிரிச்சு
ஆடிட்டு இருக்கு. அதை திமுக அரசு தீர்த்து வைக்கல. ஆனால், தாய்மார்களுக்கு 1000 ரூபாயை
பிச்சை மாதிரி போடுது. பெண்களுக்கு 1000 ரூபாய் பிச்சை போட்டால் திமுகவுக்கு அவர்கள்
வாக்களித்து விடுவார்களா?’’ என்று கேள்வியெழுப்பியது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும்
ஏற்படுத்தியுள்ளது.
முதிய நிலையில் உள்ளவர்களுக்கும்
வேலையில்லாமல் சிரமப்படும் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் திட்டம் பெருமளவுக்குக்
கைகொடுத்துள்ளது. இந்த திட்டத்தின் வெற்றியை அடுத்தே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்
இந்த திட்டம் செயல்படத் தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில் மாதாந்திர
உதவித் தொகையை பிச்சை என்று குஷ்பு கூறியிருப்பதை அறியும் பெண்கள், ‘குஷ்புக்கு வாய்க்கொழுப்பு
ரொம்பவே அதிகமாயிடுச்சு… ஆயிரம் ரூபாயின் மதிப்பு அவருக்கு எப்படித் தெரியும்? என்று
கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.