Share via:
நடிகை ரஞ்சிதாவுடன் கட்டில் லீலைகள் அம்பலமானதும் நித்தியானந்தா
சிறைக்குப் போவார் என்று தான் மக்கள் நினைத்தார்கள். ஆனால், அவரோ கைலாசா என்று தனக்கென்று
ஒரு தனி நாட்டை உருவாக்கிக்கொண்டு ஜாலிப் பேர்வழியாக தினம் ஒரு வீடியோ வெளியிடுகிறார்.
அவருடன் இருக்கும் நடிகை ரஞ்சிதாவும், ‘நான் இவருடன் இருப்பதையே விரும்புகிறேன்’ என்று
வீடியோவில் பேசுகிறார்.
கைலாசாவின் ஜனாதிபதியாக நித்தியானந்தாவும் பிரதமராக ரஞ்சிதாவும்
இருந்து லீலைகள் புரிந்துவரும் நிலையில், இவர்கள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்காதது
ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
ஆட்கடத்தல், கற்பழிப்பு, கொலை, நில அபகரிப்பு, தங்கம் கடத்தல்
என்று நித்தியானந்தா மீது இல்லாத வழக்குகள் இல்லை. அதனாலே இந்தியாவில் இருந்து எஸ்கேப்
ஆகிவிட்டார். தன்னை கடவுள் அவதாரம்’ என்றும், கைலாசம்’ என்ற ஒரு நாட்டின் அதிபர் அனைவருக்கும்
விசா தருகிறேன்’ என்று பில்டப் கொடுத்துவருகிறார்.
கர்நாடக மாநிலம் பிடதியைச் சேர்ந்த நித்தியானந்தாவின் சீடரான சுரேகா
தாக்கல் செய்த மனுவில், ‘‘கணேசன் என்பவருக்குச் சொந்தமான விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம்
அருகே உள்ள 45 ஏக்கர் நிலத்தை நித்தியானந்தாவின் அறிவுறுத்தலின்பேரில், அபகரிக்க முயன்றதாக
தேனி மாவட்டம் சேத்தூர் காவல் நிலையத்தில், என்மீதும், தர்மலிங்கம், ரதி ஆகியோர்மீதும்
வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றும், இந்த வழக்கில் தங்களுக்கு முன்பிணை வழங்கவேண்டுமென்றும்’’
அம்மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பரதசக்கரவர்த்தி முன் நடைபெற்றபோது,
மனுதாரருக்கு முன்பிணை வழங்கக் கூடாது என்று புகார் கொடுத்தவர் தரப்பு இடையீட்டு மனுதாக்கல்
செய்தது. இந்த வழக்கு குறித்து நீதிபதி கூறுகையில், ‘‘நித்தியானந்தா தலைமறைவாக இருந்துகொண்டு
இந்திய நீதித் துறைக்கே சவால் விடுகிறார்! அவருக்கு எதிராக பல வழக்குகளில் ‘பிடிவாரண்ட்‘
உள்ளது. இவரது சொத்துகளுக்குப் பாதுகாப்புத் தருவது உகந்ததா? என்ற பொருத்தமான கேள்வியை
எழுப்பினார்.
சாதாரண மோசடிக்காரர்களை உடனடியாக விரைந்து கைது செய்யும் அரசும்,
தண்டிக்கும் நீதிமன்றங்களும் இதுபோன்ற கொள்ளைத் திமிங்கிலங்களின் திமிர்வாத நடவடிக்கையை
அனுமதிப்பது, சட்டத்தின் ஆட்சிக்கு விடப்பட்டிருக்கும் சவால். எனவே, காவல்துறையில்
தனிப் பிரிவை ஏற்படுத்தி, மேற்கொண்டு செயல்படவேண்டும்! உடனடியாக தமிழ்நாடு அரசு இதற்கென
தனிப் பிரிவை காவல்துறையில் உருவாக்கி, இந்தப் பகற்கொள்ளை படாடோப பம்மாத்துப் பேர்வழிகளி்ன்
கொட்டத்தை அடக்க முன்வரவேண்டும்.