Share via:
திமுக சார்பில் ஒவ்வொரு மாதமும் ஒரு சர்வே எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திமுகவினர் எடுத்திருக்கும் விஜய் குறித்த சர்வே அந்த கூடாரத்தையே அலற
வைத்துள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்ட வகையில் நடிகர் விஜய் கட்சியின்
நிலவரம் குறித்து தமிழகம் முழுவதும் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி
பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது முதல் முறையாக ஓட்டுப் போடும் இளைய வாக்காளர்களில் சுமார்
70% வாக்குகள் விஜய்க்குப் போகிறது. இவர்களில் சிறுபான்மை சமுதாயத்தினர் 38 சதவிகிதம்
என்பது ஆச்சர்யமான விஷயம். சிறுபான்மையினர் வாக்குகள் அப்படியே திமுக பக்கம் சாய்ந்துவிடும்
என்ற நம்பிக்கையை விஜய் சர்வே உடைத்துக் காட்டியுள்ளது.
அடுத்த கட்டமாக பெண்களின் வாக்குகள் 63% விஜய்க்குக் கிடைக்க வாய்ப்பு
இருப்பதாகத் தெரியவந்துள்ளது. பெண்களின் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்கிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆதரவாளர்களாகவே பெண்கள் இருக்கிறார்கள். இந்நிலையில்
அவர்களும் 63% விஜய்க்கு ஆதரவு என்று தெரியவந்திருப்பது திமுக தலைமையை யோசிக்க வைத்துள்ளது.
இன்று விஜய் கட்சியின் சார்பில் முதல் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதேபோல் பல்வேறு கூட்டங்கள், போராட்டங்கள் நடத்தத் தொடங்கினால் விஜய் செல்வாக்கு மேலும்
மேலும் உயரும். என்வே, விஜய் தனித்து நிற்பதே வெற்றிக்கு சாதகமாக இருக்கும். அதிமுகவுடன்
சேரக்கூடாது என்றே பிரார்த்தனை செய்கிறார்கள்.