Share via:
பரந்தூர் விமான நிலையம்
அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ள விஜய்க்கு, எங்க தலைவர் சீமான்
போன்று நேரடியாக பரந்தூருக்குப் போய் போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தர முடியுமா,
செய்தியாளர்களை சந்திக்க முடியுமா என்று சவால் விட்டிருக்கிறார்கள் நாம் தமிழர்கள்.
அதோடு, பரந்தூருக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு குலசேகரபட்டினத்துக்கு ஆதரவு தருவது
என்ன லாஜிக் என்று கலாய்க்கிறார்கள்.
விஜய் அரசியல் கொள்கைகள்
அறிவித்ததும் சீமான், ‘’ஒண்ணு அந்தப் பக்கம் நில்லு இல்லைன்னா இந்தப் பக்கம் நில்லு.
நடுவுல நின்னா லாரி அடிச்சு செத்துப்போயிடுவ…’’ என்று எச்சரிக்கை செய்தார். இதையடுத்து
நாம் தமிழர்கள் கடுமையான விஜய் எதிர்ப்பு நிலை எடுத்து சமூகவலைதளத்தில் புகுந்து விளையாடினார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கத்
திணறிய ரசிகர்களுக்கு வழி காட்டுவதற்காக பனையூரில் அவசர செயற்குழுக் கூட்டத்துக்கு
ஏற்பாடு செய்தா நடிகர் விஜய். செய்தியாளர்கள் யாரையும் சந்திக்காமல் தீர்மானங்கள் மட்டும்
நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக பல தீர்மானங்கல் இருந்தன.
குறிப்பாக, ’ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத மின்கட்டண உயர்வைத் திணித்துள்ள
தமிழக அரசு, இரு மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையைக் கைவிட்டு, மாதந்தோறும்
மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்ற தீர்மானத்தை விஜய் கட்சியினர்
ஹைலைட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் மீண்டும்
விஜய்யை நாம் தமிழர்கள் வம்புக்கு இழுத்திருக்கிறார்கள். ஏனென்றால், ’’பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்திருக்கும்
விஜய் குலசேகரன்பட்டினத்தில 2376 ஏக்கர்ல பாஜக அமைக்கப்போற ராக்கெட் ஏவுதளத்துக்கு
வரவேற்பு கொடுத்திருப்பதை சுட்டிக் காட்டுகிறார்கள். குலசேகரன்பட்டினத்திலும் விவசாய
நிலமே அபகரிக்கப்படுகிறது. ஒண்ணு ரெண்டயும் ஆதரிக்கிறேன்னு சொல்லு, இல்லை ரெண்டயும்
எதிர்க்குறேன்னு சொல்லு, நடுவில நின்னா லாரி அடிக்கத் தான் செய்யும்.
எங்க தலைவர் போட்ட
தீர்மானங்களை காப்பியடிச்சு விஜய் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார். விஜய்க்கு தைரியமும்
தெம்பும் இருந்தால் எங்கள் சீமான் செய்தது போன்று பரந்தூர் போராட்டக்காரர்களை நேரில்
சந்தித்து ஆதரவு தரட்டும், செய்தியாளர்களை சந்தித்து விமான நிலையம் எதிர்ப்பு குறித்து
விளக்கம் கொடுக்கட்டும்’’ என்று சவால் விடுகிறார்கள்.
என்ன செய்யப்போகிறார்
விஜய்..?