Share via:
தேர்தல் நேரத்தில் தேவையில்லாமல் ரஜினியை பகைத்துக்கொள்ள வேண்டாம்,
ஆதவ் மன்னிப்பு கேட்டுவிடலாம் என்று விஜய்யிடம் தவெக இரண்டாம் கட்டத்தலைவர்கள் கூறியிருக்கிறாகள்.
அதற்கு அவர், ‘உண்மையைப் பேசியதற்கு மன்னிப்பு கேட்கணும்னா, அதை நானே மேடையில் ரஜினியிடம்
கேட்டுவிடுகிறேன்’ என்று எக்குத்தப்பாக பதில் கூறினாராம்.
இதையடுத்து இந்த விஷயத்தி ஆதவ் அர்ஜூனா எஸ்கேப் ஆகிவிட்டார். சமீபத்தில்
ஆதவ் அர்ஜுனா, ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் திமுக தான். விஜய்யை அப்படி யாரும் பயமுறுத்திவிட முடியாது என்று
பேசினார். இதற்கு பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் ரஜினி, “தமிழக வெற்றிகழக கட்சியின் தலைமை பொறுப்பில்
இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னை பற்றி கூறிய கருத்துக்கள் உண்மைக்கு மாறானது.
அவருடைய அவதூறு கருத்தை கண்டித்து எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்
தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன்,
தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி வேலுமணி, நண்பர் அண்ணாமலை, அர்ஜுன
மூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி
அரசியல் தலைவர்கள், திரையுலக நண்பர்கள் நடிகர்கள் அமீர், தனஜெயன் மற்றும் நக்கீரன்
கோபால், ரங்கராஜ் பாண்டே ஆகிய அனைவருக்கும் நன்றி’’ தெரிவித்திருக்கிறார்.
அதோடு, இறுதியாக “காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”
என்று ஒரு பஞ்ச் டயலாக் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வரும்
சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு எதிராக ரஜினி ரசிகர்கள் தேர்தல் வேலை செய்வார்கள் என்று
பல்வேறு ஊர்களில் இருந்தும் அறிக்கை அனுப்பி வருகிறார்கள்.
விஜய் கூட்டணிக்கு யாரையாவது அழைத்துவருவார் என்று பார்த்தால்,
எதிரிகளைத்தான் அழைத்துவருகிறார்.
