Share via:
அமைச்சர் நேரு பணி நியமன ஆணைகளில் லஞ்சம் வாங்கியிருப்பதாக குற்றம்
சாட்டி தமிழக காவல்துறை டிஜிபிக்கு கடந்த அக்டோபர் மாதம் அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது.
இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த ஸ்டாலின், அதிமுக வழக்குப் பதிவு செய்ததும் அலறிப்போய்
உத்தரவு கொடுத்திருக்கிறார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்ட டெண்டர்களுக்காக
அமைச்சர் கே.என். நேரு தனது உறவினர்கள் மூலம் 1,020 கோடி ரூபாய் வரை லஞ்சமாகவும், கட்சி
நிதியாகவும் வாங்கியிருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. சென்னை, திருச்சி மற்றும்
கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் திரு. நேருவுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் நடத்தப்பட்ட
சோதனையில், நகராட்சி நிர்வாகத் துறை டெண்டர்களில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள்
சிக்கியதாக அமலாக்கத்துறை கூறியிருந்தது.
அமலாக்கத்துறையின் இந்த குற்றச்சாட்டுகளை அமைச்சர் நேரு மறுத்திருந்தார்.
இந்த கடிதங்களை பெற்ற பிறகும் தமிழக காவல்துறை சார்பில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பலமுறை எச்சரிக்கை
செய்தும் ஸ்டாலின் கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேருவுக்கு
எதிராக அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு
உத்தரவிடக்கோரி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில்
நேற்று வழக்கு தொடர்ந்தார்.
வழக்கமாக நீதிமன்றத்தில் குட்டு வாங்கிவரும் திமுகவுக்கு இந்த
விவகாரத்திலும் பெரிய சிக்கல் வரும் என்பதை அறிந்ததும், அமைச்சர் கே.என்.நேரு மீது
குற்றம்சாட்டி அமலாக்கத் துறை அனுப்பியுள்ள கடிதம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து ஒப்பந்தங்களை வழங்குவதில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்ததாகக்
கூறப்படும் புகார் உட்பட, டிஜிபிக்கு அனுப்பப்பட்ட 2 புகார்கள் குறித்து டிவிஏசி விரிவான
விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தேர்தல் நேரத்தில் நேரு வெளியே இருப்பதற்கு வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.
ஸ்டாலின் தடுத்து நிறுத்துவாரா என்று பார்க்கலாம்.