Share via:
பாம்பன் கடலில் இந்திய ரயில்வே சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய
ரயில் பாலத்தை வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்காக
தமிழ்நாடு வருகிறார். அவரை வரவேற்பதற்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்ட
தலைவர்கள் அனுமதி கேட்டிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி வரவேற்பாரா என்ற கேள்வி
எழுந்துள்ளது.
வரும் 6ம் தேதி தனி விமானம் மூலமாக மதுரை விமான நிலையம் வந்து
இறங்கும் மோடி, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மண்டபம் செல்கிறார். அங்கு ராமேஸ்வரம்
– தாம்பரம் இடையேயான புதிய ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து, ராமேஸ்வரம்
ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம்
விடுதியில்
நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதன் பின்னர், மீண்டும் ஹெலிகாப்டர்
மூலமாக மதுரை செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக
நடைபெற்று வருகிறது.
டெல்லிக்கே சென்று அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி இந்த
நிகழ்வில் மோடியை சந்திக்க வாய்ப்பில்லை என்றாலும், அவரை சந்திக்க வைப்பதற்கு சில முயற்சிகள்
நடந்துவருகின்றன. எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை என்றால் செங்கோட்டையன் சந்திப்பார்
என்று சொல்லப்படுகிறது. அப்படி ஒரு சூழல் ஏற்படாமல், செங்கோட்டையனை தடுத்து நிறுத்த
வேண்டும் அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.
வேலுமணி மூலம் இந்த சந்திப்பு நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், மோடி வருகைக்கு எதிர்ப்பு
தெரிவித்து கோ பேக் மோடி வழக்கம் போல் இப்போதே தொடங்கிவிட்டது. மீனவர் படுகொலை, இந்திதிணிப்பு,
வரி பங்கு ஏய்ப்பு செய்யும் மோடியின் வருகையை கண்டித்து ஏப்6ல் கருப்புகொடி ஆர்ப்பாட்டம்
என்று திருமுருகன் காந்தி ஆரம்பித்து வைத்திருக்கிறார்.
6ம் தேதி அரசியல் பரபரப்பு நிச்சயம் இருக்கிறது.