Share via:

vசவுக்கு சங்கர் வீட்டில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், ஆங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாமென சொல்லப்படுகிறது என்றாலும் இது சவுக்கு சங்கருக்கு கொடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
இதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ‘’ஜனநாயகத்தின்
மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம்
கொடுமையின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும்
விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள
அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவம்’’ என்று கண்டித்தார். பா.ஜ.க.
தொடங்கி விடுதலை சிறுத்தைகள் கட்சி வரையிலும் இதனை கண்டித்துள்ளன.
இந்த நிலையில், தாயாரின் உயிருக்கு ஆபத்து நேரும் என்பதால் சவுக்கு
மீடியா மூடப்படும் என்று சவுக்கு சங்கர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் சவுக்கு
சங்கர் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் குரல் எழுப்பிவருகிறார்கள்.
அதேநேரம், ‘தனி மனிதராகப் போராடுவதை விட எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து போராடுங்கள்.
அவரது கட்சிக்கு வாருங்கள்’ என்று பலரும் கேட்டுகொண்டுள்ளார்கள். நேற்றைய சம்பவத்தின்
போது அ.தி.மு.க.வினரே விரைந்து வந்து சவுக்கு சங்கருக்கும் அவரது குடும்பத்துக்கும்
ஆதரவு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
நேரடியாக எடப்பாடி பழனிசாமியை சந்தியுங்கள் என்று மீண்டும் மீண்டும்
சவுக்கு சங்கருக்கு ஆலோசனை சொல்லப்படும் நிலையில், தனிக்கட்சி தொடங்குங்கள். அதுவே
உங்கள் பாதுகாப்பு என்றும் சிலர் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இந்த விவகாரம் இப்போது சிபிசிஐடி
வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகவே, உண்மையான நோக்கம் வெளிவந்துவிடும் என்று கருதப்படுகிறது.
அதேநேரம், சவுக்கு சங்கருக்கு அவரது பாணியில் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்
என்று தி.மு.க.வினரும் காங்கிரஸ் கட்சியினரும் சமாளிக்கிறார்கள். எப்படி என்றாலும்
சவுக்கு சங்கர் போன்றவர்கள் தொடர்ந்து இயங்க வேண்டும். அதுவே, இந்திய ஜனநாயகத்துக்கு
மதிப்பு.