Share via:
பெண் போலீஸாரை ஆபாசமாக பேசியதில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர்
மீது தொடர்ச்சியாக பல வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதோடு அவரது வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் எல்லாம் ரெய்டு நடந்திருக்கிறது.
இந்த நிலையில் சவுக்கு சங்கரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க
அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில்
நேற்று நடைபெற்றது.
போலீஸ் காவலில் விசாரிக்க, சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்புத்
தெரிவித்தனர். ஏற்கெனவே ஒரு கை உடைக்கப்பட்ட நிலையில், இன்னொரு கையும் உடைக்கப்படும்
என்று அச்சம் தெரிவித்தனர்.
ஆனால், போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹேமந்த், வழக்கின் உண்மைத்
தன்மை மற்றும் முக்கிய ஆவணங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டியிருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து, சங்கரை ஒருநாள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்து நீதிபதி
ஜெயப்பிரதா உத்தரவிட்டார்.
அதோடு சவுக்கு சங்கரை எப்படி கூட்டிட்டு போறிங்களோ அப்படியே கூட்டிட்டு
வரணும். மனரீதியாகவும் உடல்ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது என்பது போன்ற நிபந்தனைகளுடன்
ஒரு நாள் மட்டும் போலீஸ் கஸ்டடிக்கு நீதிபதி உத்தரவு போட்டார்.
இதையடுத்து சவுக்கு சங்கரை ரகசிய இடத்தில் சங்கரிடம் போலீஸார்
விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் அவர் ஆளும் தி.மு.க. தரப்புக்கு எதிராகப்
பேசுவதற்குத் தூண்டியது யார் எனவும், வாங்கிய பணம் குறித்தும் விசாரணை செய்யப்பட இருப்பதாக
சொல்லப்படுகிறது.
சவுக்கு சங்கருக்கு பணம் கொடுத்து தி.மு.க. மீது குற்றம் சாட்டச்
சொன்னது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஆட்கள் என்று கூறப்படும் நிலையில், எடப்பாடி
பழனிசாமி அல்லது அவருக்கு நெருக்கமானவரை காட்டிக் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.