Share via:

தமிழகத்துக்குப் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட
உறுதியாகிவிட்டது. இந்த நிலையில், அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டால் அதற்கு மாவட்டத்தலைவர்கள்
அல்லது முக்கியப் புள்ளிகள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று பா.ஜ.க.
மேலிடம் தீவிரமாக விசாரித்துவருகிறது.
பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை கடந்த 2021ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்.
மூன்று ஆண்டு பதவிக் காலம் முடிந்த பிறகும் அண்ணாமலையே மீண்டும் தலைவராக வர வாய்ப்பு
இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்ற கோணத்தில் பா.ஜ.க. நகர்கிறது.
ஆகவே, அண்ணாமலையை மாற்றினாலே கூட்டணிக்கு வாய்ப்பு உண்டு என்பது உறுதியானது. இதையடுத்து
அண்ணாமலை டெல்லிக்குச் சென்று திரும்பினார். அதையடுத்து, புதிய தலைவருக்கான ரேஸில்
இல்லை என்று நான் இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன்
ஆகியோரில் ஒருவர் புதிய தலைவராக நியமனம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக நயினார் நாகேந்திரனுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில்
நயினார் நாகேந்திரன் திடீர் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
ஆகவே, நயினார் நாகேந்திரனுக்கே புதிய தலைவருக்கான வாய்ப்பு இருப்பதாக
கூறப்படுகிறது. அதே சமயம் அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு
தேசிய அளவிலான பதவி கொடுப்பதற்கு வாய்ப்பு உண்டு என்கிறார்கள். அதேநேரம், அண்ணாமலையை
பதவியில் இருந்து எடுத்தால் கட்சியில் சலசலப்பு நிலவுமா என்று கேட்கப்பட்டுள்ளது. சமூகவலைதளம்
தவிர வேறு எங்கேயும் அண்ணாமலைக்கு ஆதரவு இல்லை என்று மூத்த தலைவர்கள் உறுதி கொடுத்திருக்கிறார்கள்.
அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்கப்பட்டுள்ளது. அவர்களும்
கட்சியே முக்கியம் அண்ணாமலை இல்லை என்று உறுதி கொடுத்திருக்கிறார்களாம். ஆகவே, மாற்றம்
உறுதி. புதிய தலைவர் சஸ்பென்ஸ்க்கு இரண்டு
நாட்களுக்குள் விடை தெரிந்துவிடும்.