News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக பா.ம.க. அறிவிப்பு செய்திருக்கிறது. இது முழுக்க முழுக்க ராமதாஸின் சுயநல முடிவு என்றும் இதன் மூலம் வன்னியர் உள் ஒதுக்கீட்டு ஆபத்து என்றும் எச்சரிக்கை பதிவு வெளியிட்டிருக்கிறார் வன்னியர் சத்தியர் சாம்ராயத்தின் தலைவரான சிஆர்.ராஜன்.

அவரது பதிவில், ‘டாக்டர்.ச.இராமதாஸ் அவர்கள் .வன்னியர் 10.5% யை அழித்த வன்னிய விரோதிகள் உள்ள பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து உள்ளார். வன்னியர் 10.5% க்கு எதிராக குரல் கொடுத்த வன்னியர் விரோதிகளான முக்குலத்தோர் சங்க தலைவர்கள் திரு. T.T.தினகரன், திரு.ஓ.பி.எஸ்., நாடார் சங்க தலைவர் சரத்குமார், 68-சீர்மரபினர் சமூகங்களின் தலைவர் ராம. ஶ்ரீநிவாசன் (பா. ஜ. க) இவர்கள் உள்ள பா.ஜ.க. கூட்டணியில் டாக்டர் ச. இராமதாஸ் கூட்டணி சேர்ந்து, வன்னியர் 10.5% உள் இட ஒதுக்கீட்டை, அவர் வாழ்நாளில் பெற முடியாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளார்.

டாக்டர் ச. இராமதாஸ் அவர்கள்

 1. பா.ஜ.க.கூட்டணியில் சேரும்போதே, முதலில் பெரும் லாபம், 

2. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்து பலம் வாய்ந்த கூட்டணியாக மாறிவிட கூடாது, அதனால் பா.ம.க. + அ.தி.மு.க. கூட்டணியில் சேர கூடாது என்பதற்காக தி.மு.க. தலைமை குடும்பம் மூலம் இரண்டாவது லாபம்,

3. எதிர் கூட்டணிகளான தி.மு.க. கூட்டணி மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் நியமிக்கும் VIP – வேட்பாளர்களை எதிர்த்து வெற்றி பெற, பலம் வாய்ந்த பா.ம.க.வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என பொய் உரைத்து, பா.ஜ.க. மூலம் இரண்டாவது முறை, மூன்றாவது லாபம்.

4. எதிர் கூட்டணியான அ.தி.மு.க. VIP – வேட்பாளர்களிடம், பா.ம.க.வில் தோல்வி அடையும் போலி ( Dummy ) வேட்பாளர்களை நிறுத்த நான்காவது லாபம்

5. தி.மு.க. VIP வேட்பாளர்களிடம், தோல்வி அடையும் போலி (Dummy) வேட்பாளர்களை பா.ம.க வில் நிறுத்த ஐந்தாவது லாபம்.

6. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்திட உள்ளோம் என கடைசி நேரத்தில நாடகம் ஆடி, தன் மகனுக்கு ராஜ்ய சபா எம்பி மற்றும் மத்திய அமைச்சர் அடைய ஆறாவது லாபம் என

டாக்டர். ச.இராமதாஸ் அவர்கள், மேற்கண்ட ஆறு வகையான லாபங்களையும் ஒரே தேர்தலில் அடைந்து விடும் வகையில் கூட்டணி அமைத்து கீழ்கண்டவாறு அரசியல் சூதாட்டம் ஆடுவார் பா.ம.க.வில் அப்பாவி ஏழை வன்னிய வேட்பாளார்கள், நகை, வீடு, தோட்டத்தை விற்று தேர்தலில் நின்று அழிந்து போவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

உதாரணத்திற்கு நடந்த சூதாட்டம்.

2001 – சட்டமன்ற தேர்தலில் டாக்டர் ச.இராமதாஸ் அவர்கள் அதிமுக கூட்டணியில் சேர்ந்தார். முதலில் சைதை சட்டமன்ற தொகுதியில் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் வேட்பாளராக நிறுத்த தி.மு.க. தலைமை முடிவு செய்தது. முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளர் சைதை கிட்டு அவர்களுடன் டாக்டர்.ச. இராமதாஸ் சேர்ந்து கொண்டு சைதை சட்டமன்ற தொகுதியில் பா.ம.க.சார்பில் டாக்டர் அன்புமணி இராமதாஸ் வேட்பாளராக நிறுத்த உள்ளோம் என பொய் பிரசாரம் செய்த பின்பு, மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை சைதை தொகுதி வேட்பாளரில் இருந்து விலக வைத்து, சைதை கிட்டுவை வேட்பாளராக்க திட்டமிட்டு பெரும் லாபம் அடைந்தார். அண்ணா நகர் ரமேஷ் மூலம், திரு.மு.க.ஸ்டாவின் மேற்கண்ட அரசியல் சூதாட்டத்தை அறிந்தவுடன், சைதை தொகுதியில் சைதை கிட்டுக்கு பதிலாக, தி.மு.க. சார்பாக வை. பெருமாளை நிற்க வைத்து வெற்றி பெற வைக்கப்பட்டது.

மேலும், 2001 சட்டசபை தேர்தலில், காட்பாடி தொகுதியில் மாண்புமிகு D. துரைமுருகன், அண்ணாநகர் தொகுதியில் ஆற்காடு வீராசாமி, விழுப்புரம் தொகுதியில் மாண்புமிகு பொன்முடி, திருவண்ணாமலை தொகுதியில் பிச்சாண்டி, அந்தியூர் தொகுதியில் செல்வராஜ் என VIP வேட்பாளர்களை திமுக வேட்பாளர்களாக நிறுத்தியது. டாக்டர். ச. இராமதாஸ் அவர்கள் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களிடம், மேற்கண்ட தி.மு.க VIP – வேட்பாளர்கள் தொகுதிகளை, பா.ம.க. கூட்டணிக்கு தாருங்கள், நாங்கள் வெற்றி பெறுவோம் என கூறி பெரும் லாபம் பார்த்தார். அதற்கு பின் மேற்கண்ட தி.மு.க. VIP -வேட்பாளர்களிடம் பா.ம.க.சார்பாக தோல்வி அடையும் போலி ( Dummy ) வேட்பாளர்களை நிறுத்துகிறோம் என கூறி மற்றும் ஒரு லாபம் பார்த்தார்.

2024 – பாராளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.விடம் கூட்டணி சேர ஒரு பெரும் லாபமும், அ.தி.முக.விடம் கூட்டணி சேர மாட்டோம் என திமுக. தலைமை குடும்பத்திடம் ஒரு பெரும் லாபம் பெற்று, பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து, வன்னியர் 10.5% உள் இடஒதுக்கீட்டை அவர் வாழ்நாளில் பெற முடியாத நிலையை டாக்டர். ச.இராமதாஸ் அவர்கள் உருவாக்கி விட்டார் என்று கூறியிருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link