Share via:
திமுக கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தில் முழுவதுமாக இறங்கிவிட்டது,
தமிழ் நாடு முழுவதும். அதிமுகவும் இறங்கி விட்டது. 28 தொகுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில்
இன்னமும் வேட்பாளர் பட்டியலை முடிக்காமல் தடுமாறிக்கொண்டு இருக்கிறார்கள்.
இப்படியொரு கட்சியுடன் கூட்டணி வைக்கத்தான் வேண்டுமா என்று திமுகவினர்
கொதித்துப் போய் இருக்கிறார்கள்.
அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்ய பிரதமர் மூன்று முறை வந்து விட்டார்,
அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் தொடர்ச்சியாக தமிழகம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் திமுகவுக்காக பிரசாரம் செய்ய காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வரவில்லை.
பக்கத்தில் இருக்கும் கேரளாவில் தான் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்
காந்தி பிரசாரம் செய்கிறார். இங்கு வர அரை நாள் கூட ஆகாது, வந்து ஏதேனும் ஒரு தொகுதியில்
பிரச்சாரத்தை முடித்துவிட்டு போகலாம். ஆனால் ஏன் வரவில்லை?
தமிழ்நாடு தேர்தல் 2026 என்று ராகுல் காந்தி இதுவரை வாய் திறந்து
கூட பேசவில்லை. காங்கிரஸ் கட்சி திமுகவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதுதான் அர்த்தம்
என்று கொதிக்கிறார்கள்.
அதனால் திமுகவினர், ‘’ராகுல் காந்தி அவர்கள் தமிழ்நாட்டிற்கு பிரச்சாரம்
செய்ய வருவதால் ஒரு ஓட்டு கூட கூட்டணிக்கு அதிகமாக கிடைக்கப் போவதில்லை. ஆனால் கூட்ட
ஏற்பாடுகளை செய்ய, அந்த அந்தப் பகுதி திமுக மாவட்ட செயலாளர்கள், கட்சிக்காரர்களின்
உழைப்பு அந்த நாளில் வீணாகப் போகும். அதற்கு நான்கு தெருக்கள் ஏறி இறங்கினால் கொஞ்சம்
கூடுதலாகவே திமுகவிற்கு ஓட்டு கிடைக்கும். ராகுல் காந்தி அவர்கள் வந்தால் மகிழ்ச்சி
வராவிட்டால் மாபெரும் மகிழ்ச்சி’’ என்கிறார்.
இன்னும் சிலர், ‘’இப்போதும் கெட்டுப் போகவில்லை. காங்கிரஸ் கட்சியைக்
கழட்டிவிட்டு கமல்ஹாசனுக்கும் மற்ற கட்சிகளுக்கும் 8 தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்துவிட்டு
20 தொகுதியில் திமுக நிற்க வேண்டும்’’ என்கிறார்கள்.
வழக்கம்போல் ஸ்டாலின் அமைதியாக இருக்கிறார்
