Share via:
எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைவதற்கு நான் ரெடி என்று
பன்னீர் இறங்கிவந்த பிறகும் கெட் அவுட் சொல்லிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில்,
அதிமுக மீது போட்டுள்ள வழக்குகளை வாபஸ் வாங்கிவிட்டால் கண்டிப்பாக எடப்பாடிக்கு நெருக்கடி
கொடுக்க முடியும் என்று ஆலோசனை கூறியிருக்கிறார் டிடிவி தினகரன்.
இதுவரை பா.ஜ.க-வின் பேச்சை நம்பியே எல்லா முடிவுகளையும் எடுத்துவந்தார்
பன்னீர். ஒருகட்டத்தில் டி.டி.வி.தினகரனின் ஆலோசனைகளைக் கேட்டுத்தான் அ.தி.மு.க உரிமைமீட்புக்
குழுவை ஆரம்பித்தார்.
இப்போது டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைந்தபிறகும் பன்னீர்
மட்டுமே தன்னந்தனியாக நிற்கிறார். இதையடுத்து டிடிவி தினகரன், ‘’நீங்கள் அ.தி.மு.க
மீது தொடர்ந்துள்ள வழக்குகளை வாபஸ் வாங்கிவிடுங்கள். அப்போதுதான் எடப்பாடிக்கு அழுத்தம்
கொடுத்து பேச முடியும். பாஜகவும் இதற்கு ஆதரவு கொடுக்கும்’’ என்று கூறியிருக்கிறார்.
ஆனால், பன்னீரால் இதை நம்பமுடியவில்லை. இவர்களை நம்பி வழக்குகளை
வாபஸ் வாங்கினால் எதிர்காலத்தில் அ.தி.மு.க-வுடன் உள்ள உறவு முழுமையாக துடைக்கப்படும்.
இந்த வழக்குகள் மட்டுமே தனது பாதுகாப்பு என்று நினைக்கிறார்.
அவைத்தலைவர் பதவி போதும் என்ற மனநிலைக்கு வந்திருக்கும் பன்னீர்,
இந்த தேர்தலை புறக்கணிப்பு செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்கிறார்கள்.
