News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விஜய் கட்சி ஆரம்பித்த நாளில் இருந்தே திமுகவையும் பாஜகவையும் எதிரிகள் என்று தெளிவாக அறிவிப்பு செய்துவிட்டார். ஆனாலும் பாஜகவினர் தொடர்ந்து கூட்டணி அழைப்பு கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். இந்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மிகத் தெளிவாக அறிவித்துவிட்டார். இதன் பிறகும் அவமானத்துக்கு அஞ்சாமல் பாஜக கூட்டணிக்கு இழுக்குமா என்பதே கேள்வியாக எழுந்துள்ளது.

இது குறித்து பேசும் பாஜகவினர், ‘’விஜய்யிடம் நூறாவது முறையாக பாஜக அவமானப்பட்டிருக்கிறது… அண்ணாமலை என்றால் இப்படி ஒரு அவமானம் நிகழுமா? இந்நேரம் விஜய்யை துவைத்தெடுத்து தொங்கப் போட்டிருப்பார். நயினார் நாகேந்திரன் இனிமேலாவது கொஞ்சம் தன்மானத்தயும், தன்னம்பிக்கையும் வளர்த்துக்கொண்டு செயல்பட்டால் குறைந்தபட்சம் இரண்டாவது இடத்தை இந்த கூட்டணி தக்கவைத்துக்கொண்டு, திமுகவை விட ஆபத்தான விஜய் போன்ற நபர்களை வீழ்த்த முடியும்… அய்யா நீங்க கூட்டணிக்கு வாங்க, அம்மா நீங்க கூட்டணிக்கு வாங்க என கெஞ்சிக்கொண்டிருந்தால் மக்கள் உங்களை கேவலமாகதான் பார்ப்பார்கள்… பலவீனமாகதான் கருதுவார்கள்..’’ என்று புலம்புகிறார்கள்.

அதேநேரம் விஜய் கட்சியினரும் இந்த பேச்சை வில்லங்கமாகவே பார்க்கிறார்கள். பலமான கூட்டணி இல்லை என்றால் திமுகவை வீழ்த்த முடியாது. அப்படியிருக்கும் நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்திருக்கிறார். அப்படியென்றால் அதிமுக கூட்டணியும் சாத்தியமில்லை. பெரிய கட்சிகளுடன் சேரவில்லை என்றால் மூன்றாவது இடத்துக்கு சீமானுடனே போட்டியிட வேண்டும்’’ என்று புலம்புகிறார்கள்.

இந்த அவமானம் தேவையா என்று நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களுடன் பேசியபோது, ‘’எல்லோரும் ஆரம்பத்தில் இப்படித்தான் பேசுவார்கள். தேர்தல் நெருக்கத்தில் எல்லாமே மாறிப்போகும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க…’’ என்று கூறியிருக்கிறார். நயினாருக்கு இத்தனை நம்பிக்கையா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link