Share via:

பாமக சார்பில் நாளை அதாவது ஞாயிர்றுக்கிழமை மாமல்லபுரத்தில் சித்திரை
முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. போர் நடக்கும் சூழலில்
பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் அன்புமணி இந்த நிகழ்ச்சியை
தள்ளிப் போடுவதில் பிடிவாதம் காட்டுவது அவரது கட்சிக்குள்ளே கலகம் உண்டாகியுள்ளது.
பா.ம.க. மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு,
மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து
மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் சென்னை – திருச்சி சாலை மார்க்கமாகவே மாநாட்டுக்கு செல்ல
வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் மாமல்லபுரம்
சுற்றுலாத்தலம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் பயணிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்
எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பிறந்த நாளை யாரும் கொண்டாட
வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் போருக்காக இன்று நடைபயணம்
செய்கிறார். இந்த சூழ்நிலையில் பா.ம.க. மாநாடு அவசியமா என்ற கேள்வி அந்தக் கட்சியினரிடமே
எழுந்துள்ளது. போர் பதட்டம் முடிந்த பிறகு இதனை நடத்துவதே நல்லது எனவே தள்ளிப்போட வேண்டும்
என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
ஆனால், தள்ளிப்போடுவதற்கு வாய்ப்பே இல்லை. மாநாட்டு மேடையில் போருக்கு
ஆதரவாகப் பேசலாம் என்று சமாதானம் செய்திருக்கிறார் அன்புமணி. இந்த நேரத்தில் ஏதேனும்
அசம்பாவிதம் நிகழ்ந்தால் ஒட்டுமொத்த கட்சிக்கும் கெட்ட பெயர் உருவாகிவிடும் என்று நிர்வாகிகள்
அச்சப்படுகிறார்கள்.
தள்ளிப் போடுங்க அன்புமணி.