News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நடிகர் விஜய் கட்சி சார்பில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி பேசியிருக்கிறார் ஆதவ் அர்ஜூனா. இதில் கூட்டணி பற்றி ஆதவ் பேசிய விவகாரத்துக்கு அதிமுக கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறது. விஜய்யை ஆதவ் அர்ஜுனா தவறாக வழி நடத்துவதாக அவரது கட்சியினரும் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து பேசும் த.வெ.க.வினர், ‘’வஃக்ப் போர்டு மேட்டர் குறித்து பேசுவதற்கு மட்டுமே ஆதவ் அர்ஜூனா அனுப்பிவைக்கப்பட்டார். தி.மு.க.வை எதிர்த்து கடுமையான கருத்து சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர் அதிமுக கூட்டணி குறித்து பேசியது தேவையில்லாத விஷயம். திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் அதிமுக தேவை. அவர்களை பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வரவிடாமல் கெடுத்துவிட்டார். கண்டிப்பாக விஜய் இது குறித்து பேசுவதற்கு அனுப்பவே இல்லை. தேவையில்லாமல் கூட்டணிக் குழப்பம் உண்டாக்குகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணி குறித்து ஆரம்ப கட்டத்திலேயே பேசி சிக்கலாக்கியது போன்று இப்போதும் ஆகிவிட்டது’’ என்று கூறினார்கள்.

ஆதவ் பேச்சை அதிமுக கொஞ்சமும் ரசிக்கவில்லை. ஆகவே, கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். ‘’திமுக முதல்வர் மருமகன் சபரீசன் நெருங்கிய நண்பரான லாட்டரி அதிபர் மார்டின் மருமகன் அடையாளத்தில் வளம் வரும் ஆதவ் அர்ஜுனன் அவர்களே நீ எல்லாம் அதிமுக தோற்கும் கட்சி என எகத்தாளம் பேச என்ன அருகதை இருக்கு. இதே ஆதவ் அர்ஜுனன் தான் விசிகவில் இருந்து வெளியே வந்தவுடன் திமுகவை எதிர்க்க பலமான கட்சி அதிமுகவால் மட்டுமே முடியும், 2021 சட்டமன்ற தேர்தலில் பத்து வருடம் அதிமுக தொடர்ந்து ஆட்சி செய்த பிறகும்,பாஜக கூட்டணி முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முன்னிறுத்தி,வெறும் 3 சதவீத வாக்கில் திமுகவிடம் அதிமுக தோற்றது நாடாளுமன்ற தேர்தல் வேறு,சட்டப்பேரவை தேர்தல் வேறு என்று திமுக மற்றும் பிரசாந்த்கிஷோர் தேர்தல் யூக்தி மீறி எடப்பாடியார் முதலமைச்சராக அறிவித்த 2021 சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக கட்சி 75 சீட் ஜெயித்தது பெரும் சாதனை என்று ஒவ்வொரு சேனலாக சென்று புகழ்ந்தவர்.

இன்று அதே ஆதவ் அர்ஜுனன் வாய்,தோற்கும் கட்சி அதிமுகவுடன் கூட்டணி என்று இன்று எகத்தாளம் பேசும் போதே ஆதவ் அர்ஜுனன் தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி சேராமல் இருக்க திமுக மாப்பிள்ளை சபரீசனால் அனுப்பப்பட்ட ஆள் என்று பெரும்பான்மையான தமிழக மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். திமுகவில் கூட்டணியில் இருந்தபோதே விசிகவில் சேரக்காரணம் என்ன???மாப்பிள்ளை சபரீசன் தான் விசிக கட்சியை கண்காணிக்க அடக்கி வைக்க அனுப்பி வைத்ததாக அன்றே பேச்சு எழுந்தது இன்று 100 சதவீதம் உண்மை என்று தெரிகிறது. சரி அடுத்து விசிகவில் இருந்து கொண்டே திமுகவை எதிர்ப்பது போல் நாடகமாடி, திமுக கட்சி அழுத்தத்தால் வெளியேறுவது போல் விசிக தலைவர் திருமாவளவன் உதவியுடன் நாடகமாடி, அங்கிருந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேர்ந்த ஆதவ் அர்ஜுனன், பிரசாந்த் கிஷோரை கூப்பிட்டு வந்து தேர்தல் யூக்தி செய்வதாக கூறி தமிழக வெற்றி கழகம்-அதிமுக கூட்டணி ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டு தனது ஒரிஜனல் ஓனர் சபரிசனுக்கும் திமுகவுக்கும் விசுவாசமாக எப்படியாவது திமுக அதிருப்தி வாக்குகள் 2026 சட்டப்பேரவை தேர்தல் சமயம் எதிர்கட்சிகள் ஒன்றிணையக்கூடாது என்று நடிகர் விஜயை மட்டுமல்ல தமிழக வெற்றிக் கழகம் தொண்டர்களையம் குழப்பி விடும்.

 ஆதவ் அர்ஜுனன் போன்ற திமுக கட்சி ஸ்லீப்பர் செல்கள் தான் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் ஏராளமாக ஊடுருவி திமுக கட்சியை 2026 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ஆட்சியில் அமர்த்த தீயாய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்து கொண்டே வேலை செய்கின்றனர். ஆனால் இதை எல்லாம் கண்டு தமிழக மக்கள் ஏமாந்து விடுவார்கள் என ஆதவ் அர்ஜுனன் போன்ற ஸ்லீப்பர் செல்கள் தமிழக மக்களை ஏமாளிகள் என நினைப்பதற்கு மாற்றாக 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நடிகர் விஜயை அம்போ என்று விட்டுவிட்டு மீண்டும் ஆதவ் அர்ஜுனன் தனது நண்பர் சபரீசன் கட்சியும் தனது தாய்கழகமான திமுகவில் இணைந்து கொண்டு, இன்னொரு மக்கள் நீதி மய்யமாக தமிழக வெற்றிக் கழகத்தை மாற்றியிருப்பார்கள்.இறுதியில் கமல் போல் விஜய்யும் திமுகவில் சரண் அடைந்து இருப்பார்.

ஜனவரியில் தமிழக அரசியல் மாறும், பிப்ரவரியில் அரசியலை மாற்றிக் காட்டுகிறேன், மார்ச் ல பாருங்க என்ன நடக்குதுன்னு… ஒன்னும் நடக்கல. நடக்காது. இப்போது – ஜூனில் விஜயை பாதயாத்திரை செய்ய வைக்கிறேன் என வீராப்பு வாரம், வாரம் ஒருவர் பிரஸ் மீட்டாம். இதுதான் வியூகமா?’’ என்று போட்டுத் தாக்கியிருக்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link