News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

தேர்தல் ஆணையம் அதிரடியாக தமிழ்நாடு உள்துறை செயலாளராக இருந்த தீரஜ் குமார் ஐ ஏ எஸ் மாற்றி அதிரடியாக மணிவாசன் ஐ ஏ எஸ் நியமனம் செய்துள்ளது.

கடந்த ஒருவாரகாலமாக தமிழ்நாட்டில் ஐ ஏ எஸ் , ஐ பி எஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி வருகிறது.
குறிப்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் , பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், சென்னை கமிஷனர் அருண், விஜிலென்ஸ் டிஜிபி டேவிட்சன் தேவஆசீர்வாதம் , தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உள்ளிட்ட நபர்களை மாற்றிவிட்டு புதிய தலைமை செயலாளராக சாய்குமார். தமிழக டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர், சென்னை மாநகர கமிஷனராக அபின் தினேஷ் மொடக் , தமிழக விஜிலென்ஸ் டிஜிபியாக சந்தீப் மிட்டல் உள்ளிட்டோரை நியமினம் செய்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த பணி மாறுதல்களை எல்லாம் ஆர் எஸ் எஸ் தலைமையில் சொல்லித்தான் தேர்தல் ஆணையம் நியமனம் செய்திருந்ததாக பெரும் சர்ச்சை வெடித்தது. எதிர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து அறிக்கை விட்டியிருந்தனர்.
தேர்தல் ஆனையம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக கடும் கண்டனக்குரல்கள் எழுந்த நிலையில் தேர்தல் ஆணையம் தன் மீது விழுந்த கறையை துடைக்கவே நேர்மையான அதிகாரி என பெயர் பெற்ற மணிவாசன் ஐ ஏ எஸ் அதிகாரியை தமிழ்நாடு உள்துறை செயலாளராக நியமனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒரு வாரகாலமாக உள்துறை செயலாளராக டி பி யாதவ் என்பவரை பாஜக சார்பில் நியமிக்க போவதாக கோட்டை வட்டாரத்தில் நம்பகமான தகவல்கள் வெளியான நிலையில் இப்போது தேர்தல் ஆணையம் திடீரென நேர்மையான அதிகாரியான மணிவாசன் ஐ ஏ எஸ் அதிகாரியை உள்துறை செயலாளராக நியமனம் செய்திருப்பது கவனிக்கதக்க விடயமாக மாறியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link