Share via:

தமிழக பா.ஜ.க.வில் குழப்பம் வரும் நேரத்தில் எல்லாம் அண்ணாமலையை
பண்டல் கட்டி எங்கேனும் அனுப்பிவைப்பதை டெல்லி பா.ஜ.க. வழக்கமாக வைத்திருக்கிறது. லண்டனில்
6 மாதம் படிப்பு முடித்த அண்ணாமலை அடுத்து இமயமலைக்குச் செல்கிறாராம்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சந்தித்த அண்ணாமலை, ’’தமிழக
பாஜக தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. தமிழக புதிய தலைவர் பதவிக்காக நான் யாரையும்
கை காட்டவில்லை. பாஜக தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடுவதில்லை. சேர்ந்தே தேர்வு செய்வோம்’’
என தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவியில் மாற்றம் வர போகிறது
என்பதை அண்ணாமலையே உறுதி செய்துவிட்டார்.
இந்த விவகாரம் அண்ணாமலை ஆதரவாளர்களை ரொம்பவே டென்ஷாக்கிவிட்டது.
இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்தும் வகையில், ‘’நான்தமிழக மண்ணை விட்டு எங்கும் போக
மாட்டேன்… டெல்லிக்கு போனால் ஒரு நாளில் திரும்பி விடுவேன்… இமயமலைக்குப் போனாலும்
திரும்பிவருவேன். எப்போதும் தமிழ்நாட்டில் தான் சுற்றிட்டு இருப்பேன்…’’ என்று ஆறுடல்
கூறத் தொடங்கியிருக்கிறார்.
இந்நிலையில் அண்ணாமலையின் வார் ரூம் ஆட்கள், ‘’அண்ணன் அண்ணாமலை
என்ற தலைசிறந்த அரசியல் விஞ்ஞானியை இமயமலைக்கு டெல்லி அனுப்பிவைக்கிறது என்றால் கண்டிப்பாக
அதன் பின்னணியில் முக்கியமான காரணங்கள் இருக்கும். அதாவது, மோடிக்கு 75 வயதாகிவிட்டது.
அடுத்த தேர்தலில் அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால் சரியாக இருக்காது என்பதால்
அண்ணாமலையை பிரதராக்க முயற்சி செய்கிறார்கள். அதற்கு பயிற்சி கொடுப்பதற்கே இமயமலைக்கு
அனுப்புகிறார்கள்’’ என்று பேசிவருகிறார்கள்.
அண்ணாமலை ஆதரவாளர்கள் ஆசைப்படலாம் தப்பில்லே… பேராசைப்படுறாங்களே.