Share via:
சாதிகள் இல்லையடி பாப்பா என்று முழக்கமிட்ட சமூக சீர்திருத்தவாதி
புரட்சிக்கவி பாரதியாரின் 143வது பிறந்த நாள் விழா இன்று தமிழகத்தில் கொண்டாடப்பட்டு
வருகிறது. இதையொட்டி ஆளுநர் மாளிகையில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143வது பிறந்தநாளில்
அவரது தீவிர பற்றாளர்களுடன் சேர்ந்து பாரதியின் ஜதி பல்லக்கு ஊர்வலத்தை கவர்னர் தோளில்
சுமந்து தூக்கியும், கொடியசைத்தும் துவக்கி வைத்தார்.
மகாகவி பாரதியாருக்கு ஜதி பல்லக்கு தூக்கும் ஆளுநர் ரவிக்கு தி.மு.க.வினர்
எதிர்ப்பு தெரிவித்து பாரதியின் ஒரு பாடலை நினைவூட்டி பதிவு செய்து வருகிறார்கள். அதாவது, “நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு
நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு பாயும் கடி நாய்ப் போலீசு – காரப் பார்ப்பானுக்கு உண்டிதிலே
பீசு” “பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால் பெரிய துரை என்னில் உடல் வேர்ப்பான்”
“பிள்ளைக்குப் பூணூலாம் என்பான் – நம்மைப் பிச்சுப் பணம் கொடு எனத் தின்பான்”
“சூத்திரனுக்கொரு நீதி தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி, சாத்திரம் சொல்லிடு
மாயின்அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்” என்ற பாரதியார் வரிகளை ஆளுநர் இல்லத்தில்
எழுதிப் போட வேண்டும் என்று எதிர்ப்பு காட்டி வருகிறார்கள்.
பாரதியை நினைவு கூர்வது பாரதியை பார்ப்பனர் என நினைத்து தூக்கி
சுமப்பதல்ல. பாரதியின் கருத்துகளை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு காட்டுகிறார்கள்.
ஏனென்றால் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடவே இல்லை என்று
சிலர் வேண்டுமென்றே புரளி கிளப்புகிறார்கள். அவர்கள் கூற்றுப்படி, ‘’சாதி பெருமை இல்லை
பாப்பா”னு தான் பாடினாரு,,,சாதிகள் இல்லைனு பாடவே இல்லை,, அது நெல்லையப்பர் பதிப்பில்
நடந்த ஸபெல்லிங் மிஸ்டேக்’’ என்று இதனை மாற்றும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. வள்ளுவருக்கு
காவி பூசியது போன்று பாரதிக்கும் சாதிப் பூச்சு நடக்கிறது.