Share via:
அண்ணன், தம்பி என்று ஒட்டி உறவாடிக்கொண்டிருந்த ஸ்டாலின், ராகுலுக்கு
இடையில் கடும் சண்டை ஓடிக்கொண்டு இருக்கிறது. அதனாலே பாண்டிச்சேரியில் இருவரும் ஒரே
நாளில் பிரசாரம் செய்தாலும், ஒருவரையொருவர் கண்டுகொள்ளவில்லை.
ராகுலுக்குக் கோபம் என்ன என்று காங்கிரஸ் வட்டத்தில் விசாரித்தோம்.
‘’பாஜக – திமுக இடையே உள்ள மறைமுக கூட்டணி பற்றிய சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் நாளுக்கு
நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தான் இந்த தேர்தலில் ராகுல் காந்தி பெரிய அளவில்
தலையிடவில்லை.
அதிமுக கூட்டணிக்காக எந்த வலுவான ஆதரவையும் தராமல் பாஜக விலகி
நிற்பதும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து பெரிதாக
பாஜக அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற
எண்ணமும் பாஜகவுக்கு இருப்பதாக தெரியவில்லை.
இந்நிலையில், கூட்டணியில் இருக்கும் அதிமுகவுக்காக கூட செயல்படாத
பாஜக, திமுகவுக்கு மறைமுக ஆதரவு தருகிறதா என்ற அதிருப்தி அதிமுகவினரிடையே அதிகரித்து
வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியே பாஜக மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் திமுகவின் பெரிய அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய
அரசு, சமீபத்தில் சிற்றரசு உள்ளிட்ட சில நபர்களின் மீது மட்டும் சோதனை நடத்துவது ஏன்?
இது தேர்வு செய்யப்பட்ட நடவடிக்கையா என்ற கேள்வி எழுகிறது. அண்ணாநகர்
தொகுதி தொடர்பான பிரச்சனையில் இந்த சோதனைகள் மாப்பிள்ளை சாருக்கு ஆதரவான நோக்கத்தோடு
செய்யப்பட்டதா என்ற சந்தேகமும் நிலவுகிறது. இந்நிலையில் அடுத்ததாக திமுக படிப்படியாக
பாஜகவை நோக்கி நகரும் என்ற அரசியல் கணிப்புகள் வலுப்பெறுகின்றன. விரைவில் பாஜக – திமுக
கூட்டணி உருவாகும். இரண்டு ஃபாசிச சக்திகளும் ஒன்றாக இணைந்து மக்கள் மீது அழுத்தம்
செலுத்தும் நிலை உருவாகலாம்’’ என்கிறார்கள்.
அதனால்தான் தமிழக தேர்தலுக்கு இன்னமும் ராகுல் தேதி தரவில்லை என்கிறார்கள்.
அப்படியே வந்தாலும் பழைய பாசம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.
