Share via:
விஜய் அரசியல் கட்சி தொடங்குவதில் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கு
முழு சம்மதம் இருந்தாலும், அவருடன் இருக்கும் நபர்கள் மீது நம்பிக்கை இல்லை. அதனால்
ஏற்பட்ட மோதலில் பெற்றோர்கள் விலகிச் சென்றார்கள். இந்த நிலையில் மாநாட்டு மேடையில்
தாய், தந்தையர் இருந்த நிலையில், மனைவி சங்கீதா பங்கேற்காதது பல்வேறு யூகங்களைக் கிளப்பியிருக்கிறது.
சமீபத்தில் முரசொலி செல்வம் மறைவுக்கு நேரில் ஆஜராகி அஞ்சலி செலுத்தினார்
சங்கீதா விஜய். பொதுவாக இதுபோன்ற எங்கேயும் சங்கீதாவை யாரும் பார்த்ததே இல்லை. இந்நிலையில்
தி.மு.க. முக்கியப் புள்ளிக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் மாநாட்டுக்கு விஜய்
அம்மா வருவார் என்பது தெரிந்தாலும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வருவாரா மாட்டாரா என்ற
சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால், இருவரும் பங்கேற்றார்கள்.
விஜய் மாநாடு தொடங்குவதற்கு முன்பு அம்மா, அப்பா காலில் விழுந்து
ஆசிர்வாதம் வாங்கினார். அந்த நேரம் அவரது மனைவி சங்கீதா வரவில்லை என்பது ரசிகர்களிடம்
பேசுபொருளாக மாறியது. இது குறித்து விஜய் நிர்வாகிகள், ‘’குடும்ப அரசியல் பற்றி தலைவர்
பேசப்போகிறார் என்பதாலே சங்கீதாவை அழைக்கவில்லை. விஜய்தான் தடுத்து நிறுத்தினார்’’
என்று கூறுகிறார்கள்.
இன்னும் சில நிர்வாகிகள், ‘’விஜய் வாழ்க்கையில் விளையாடியதே தி.மு.க.தான்.
விஜய் மனைவி சங்கீதாவை பிரிக்கும் தி.மு.க.வின் சூழ்ச்சிக்கு அவர் அடிமையாகிவிட்டார்.
இதன் அடிப்படையிலே முரசொலி செல்வம் இறுதிச்சடங்கில் நேரில் பங்கேற்றார். ஏற்கெனவே அவர்களுக்குள்
உறவு சரியாக இல்லை. இந்நிலையில் அரசியலில் விஜய் பங்கேற்பதில் சங்கீதாவுக்கு கொஞ்சமும்
விருப்பம் இல்லை. தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் சங்கீதா இருப்பதால் அவர்கள் சொல்லித்தான்
சங்கீதா மாநாட்டில் பங்கேற்கவில்லை…’’ என்கிறார்கள்.
எப்படியிருந்தாலும் மாநாட்டில் சங்கீதா பங்கேற்காதது பெரும் குறை
தான். பொது வாழ்வுக்கு விஜய் வந்துவிட்டதால் மனைவி சங்கீதா விஷயத்திலும் உண்மையை அவர்
பேச வேண்டும் என்பது தான் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.