Share via:
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்பதை நாளை நடைபெற உள்ள இந்தியா& நியூசிலாந்து அணிக்கு இடையிலான போட்டி முடிவு செய்யும் என்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
13வது ஐ.சி.சி. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 10 நாடுகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டித் தொடரின் லீக் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்தன.
இந்தியா எதிர்க்கொண்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றி மட்டுமே கண்டு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதே போல் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
5 முதல் 10 இடங்களை முறையே பிடித்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து (நடப்பு சாம்பியன்), வங்காளதேசம், இலங்கை, நெதர்லாந்து ஆகியவை போட்டியில் இருந்து வெளியேறின.
நாளை (நவ.15) 2 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன. இப்போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தலையிலான இந்திய அணி வீரர்கள் பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை. லிக் போட்டிகளில் தோல்வியை காணாத இந்திய அணி, நாளைய அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா என்ற ஆர்வம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சொந்த மண்ணில் தோற்றுவிடக் கூடாது என்ற எண்ணத்துடன் இந்திய அணி சிறப்பாக விளையாடி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற நம்பிக்கையும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

