News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பெரியார் விவகாரத்தை சீமான் கையில் எடுத்தது தொடங்கி தி.மு.க.வும் அதன் துணை அமைப்புகளும் சீமானுக்கு கடுமையாக பதிலடி கொடுத்துவருகிறார்கள். இந்நிலையில், பிரபாகரனை ஜாமீனில் எடுத்ததாக தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுவது பொய் என்று அம்பலப்படுத்தியிருக்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

சீமான் பற்றி விமர்சனம் செய்த ஆர்.எஸ்.பாரதி, ‘’சீமான் சொல்றான் நான் பதில் பேசக்கூடாதாம், முதல்வரும்,துணை முதல்வரும் இவனுக்கு பதில் சொல்ல வேண்டுமாம்.அவர்களின் கால் செருப்புக்கு நீ சமமாவாயா? 1980 களில் எம்ஜிஆரால் பிரபாகரன் கைது செய்யப்பட்ட போது அவரை ஜாமினில் எடுத்தவன் நான்.அப்போது நீ எங்கிருந்தாய்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு தி.மு.க.வினர் ஃபயர் விட்டு வருகிறார்கள். இந்நிலையில் தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இந்த விஷயமே பொய் என்று அதிரடி குற்றச்சாட்டு கூறியிருக்கிறார். அவர், ‘’ஜாமினில் எடுத்தவர் உயிருடன் இருக்கும்போதே வரலாற்றை மாற்றுகிறார்கள்… கலைஞரிடம் பிரபாகரன் அறிமுகமானதே 1986-ல் என் திருமணத்தில் தான் என்று கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

பாண்டிபஜார் சம்பவத்தில் பிரபாகரனை பெயிலில் எடுத்தவன் நான். அதில் ஒரு குற்றவாளி ரவிந்திரன் லண்டனில் உள்ளார். இன்றும் விகடன் ராவ், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், கல்கி ப்ரியன், தாரசு ஷ்யாம் போன்றவர்கள் உள்ளனர். தோழமை கட்சி தலைவர் வைகோவிடம் கேட்கவும். இந்த வழக்கு எணSc no 2/1983 ஆவணங்கள் உள்ளன. இத்தனை பேர் உயிருடன் இருக்கும்போதே பொய் சொல்லலாமா ஆர்.எஸ். பாரதி? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தி.மு.க.வினர் கப்சிப் என்று இருக்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link