News

கூட்டணியை கோட்டை விட்ட விஜய்… வேட்பாளர்கள் எங்கேப்பா..?

Follow Us

கரூர் கட்சி மீட்டிங்கில், ’ஜனநாயகன்’ திரைப்பட குழுவினர் கரூர் மற்றும் நாமக்கல் கட்சி கூட்டம் என இரு இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தியதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து விஜய் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது.

அதேநேரம்,  தமிழக வெற்றிக் கழகத்தின் லைம் ஸ்ட்ரீம் வீடியோவில் பல அதிர்ச்சியூட்டும் உரையாடல்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது பாதுகாப்பு அதிகாரி விஜய்யிடம், ‘கடுமையான கூட்டத்தில் சிக்கியிருக்கிறோம், எனவே, ஐந்து நிமிடங்களுக்குள் பேச்சை முடித்துவிடுங்கள்’ என்று கூறுவது தெளிவாகக் கேட்க முடிகிறது.

அதானாலே இந்த வீடியோ புட்டேஜ்களை அழிக்க விஜய் முயற்சித்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் எல்லாமே சிபிஐ மூலம் மீட்கப்பட்டுள்ளது. அதோடு விஜய் வண்டியில் இருந்த கேமரா பதிவுகளும் அழிக்க முயற்சி நடந்துள்ளது.

எனவே, விஜய்க்கு கூட்டத்தின் நிலை பற்றி. தனக்கு எதுவும் தெரியாது என சொல்ல முடியாது. அழிக்க முயற்சி செய்ததாலே சிபிஐ விசாரணைக்கு மீண்டும் விஜய் அழைக்கப்பட்டுள்ளார். இப்போது டிரோன் புட்டேஜ் வெளியான விவகாரமும் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இது சிபிஐ மூலம் வெளியானதா அல்லது ஆதவ் அர்ஜூனா மூலம் வெளியானதா என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.  இந்த புட்டேஜ்களில் சினிமா கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது.

இந்த நிலையில் விஜய் எதற்காக பெரம்பூர் தொகுதியில் நிற்க தயாராக இருக்கிறார் என்பதற்கும் சரியான தகவல் கிடைத்துள்ளத். அதாவது, மூலக்கடை ,வியாசர்பாடி கொடுங்கையூர் , கண்ணதாசன் ,பார்வதி பாரதியார் நகர் என முற்றிலும் ஏழை எளிய மக்கள் தொழிலாளர்கள் மிகுந்த பகுதி பெரம்பூர். மொத்த வாக்காளர்கள் 2.22 லட்சம் இதில் தவெக அடிப்படை உறுப்பினர்கள் 45 ஆயிரம் பேர் இவர்கள் தலா ஒரு நபரை வாக்கு சாவடிக்கு அழைத்து வந்தாலே போதும் தவெக வேட்பாளர் விஜய் அவர்கள் குறைந்தபட்சம் 90 ஆயிரம் வாக்குகள் பெற்று எளிதில் வெற்றி பெறுவார் என்கிறார்கள்.

நிஜமாகவே 45 ஆயிரம் பேர் உறுப்பினர்களா என்பதை கண்டுபிடிங்கப்பா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link