News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மூன்று முறை அதிமுக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த விவகாரம் அதிமுகவினரிடம் கடும் புயலை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய்யிடம் போய் சேர்ந்திருக்கலாம், சசிகலாவிடம் போயிருக்கலாம் என்றெல்லாம் புலம்புகிறார்கள்.

இந்த நிலையில் கேசி பழனிசாமி, ‘’பன்னீர் எங்க வேணாலும் போய் இருக்கலாம், ஆனால் திமுகவுக்கு போனது ஏத்துக்கவே முடியாது. ஆனா, இதுக்கு ஓபிஎஸ் மேல மட்டும் தப்பு சொல்ல முடியுமா ?? கட்சியில் தலைமைக்கு போட்டியா இருக்கார்ன்னு இவங்க அவரை வெளிய அனுப்பி 5 வருஷம் ஆச்சு, அந்த மனுஷனும் கொஞ்சி பாத்து, மிஞ்சி பாத்து, கடையில என்னை பார்த்தா பாவமா இல்லையான்னு கெஞ்சி கூட பார்த்தார்….

தலைமை பதவி முக்கியம் அமைச்சரேன்னு, அந்த ஆளை கேட்டுக்கு வெளியவே நிக்க வச்சாங்க. அந்த ஆள் 5 வருஷமா கெஞ்சி, நீங்களும் சேர்த்திக்க மாட்டீங்க, என்ன பண்ணி இருக்கணும்னு நினைக்கறீங்க ?? எடப்பாடி அவர்கள் என்னை கட்சியில சேர்த்துகல அதனால நான் அரசியலை விட்டே போறேன்னு போகணுமா?? சாதாரண ஆட்களுக்கு இருக்கும் சர்வைவல் இன்ஸ்டிங்ட், ஈகோ, 3 தடவை தமிழ்நாட்டுக்கு முதல்வர் அந்த ஆளுக்கு இருக்காதா ??

என்னை வெளிய அனுப்பிட்டீங்கல நான் என்ன பண்றேன் பாருன்னு அவரு எடுத்து முடிவுதான் இது. திமுக எலெக்ஷன் Perception ல ஏற்கனவே அட்வான்டேஜ்ல இருக்காங்க, கூட OPS போனது ஓட்டு எல்லாம் பெருசா வராது, ஆனா அந்த perception அட்வான்டேஜ் இன்னும் ஹெல்ப் பண்ணும். கட்சி இல்லாம பொதுவா அரசியலை பார்க்கிற எல்லோருக்கும் எடப்பாடி மேல இருக்கிற மிக பெரிய வருத்தம், யாரையும் அனுசரிச்சு போகாம, யாரையும் கூட வச்சுக்காமா கட்சியை தொடர்ந்து பலவீனப்படுத்திட்டே வர்றதுதான். நாங்க ஸ்ட்ராங்கா இருக்கோம்ன்னு சொன்னாலும், தேவை இல்லாத அட்வான்டேஜ தூக்கி திமுகவுக்கு குடுத்துட்டே இருக்கார் எடப்பாடி. நான் மறுபடியும் சொல்றேன், 2026ல திமுக மறுபடியும் வந்தா அதுக்கு காரணம் எடப்பாடி மட்டுமே’’ என்று கூறியிருக்கிறார்.

கோட்டை விட்டுட்டாரே

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link