Share via:
எதிர்க் கட்சியாக இருக்கும் நேரத்தில் வீரம் பேசுவதும் ஆளுங்கட்சியாக மாறியதும் பேசியதை மறந்துபோவதும் ஸ்டாலினுக்கு கை வந்த கலை. அ.தி.மு.க.வில் செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்த நேரத்தில், ‘செந்தில் பாலாஜி ஒரு மோசடிப் பேர்வழி. ஆட்சிக்கு வந்ததும் அவரை சிறையில் அடைப்பது தான் தி.மு.க.வின் முதல் வேலை என்று கொள்கை வீரராக முழங்கினார் மு.க.ஸ்டாலின். அவர் தான் செந்தில் பாலாஜி மீது புகாரும் கொடுத்தார்.
ஆனால், அதன்பிறகு காட்சிகள் மாறின. தி.மு.க.வில் இணைந்து முக்கியப் புள்ளியாக மாறினார். டாஸ்மாக் வேட்டையில் தி.மு.க.வுக்கு வசூல் வேட்டை ஆடினார். கொங்கு பகுதியை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றினார். இந்த நேரத்தில் தான் இவரை பா.ஜ.க. தூக்கி சிறையில் போட்டது. தி.மு.க.வுக்கு எதிராக வாக்குமூலம் கேட்டது. ஆனால், அவர் வாயைத்திறக்கவில்லை. துரோகியாக மாறவில்லை. அதனால், அவர் சிறையில் இருந்து வெளியே வந்தது தியாகி என்று வரவேற்பு கொடுத்தார் ஸ்டாலின். உடனே வலுவான அமைச்சர் பதவியும் கிடைத்துவிட்டது.
இந்த நிலையில், அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் குரல் எழுப்புகிறார்கள். தியாகின்னு வார்த்தையில் மட்டும் சொன்னா போதுமா..? செந்தில் பாலாஜிக்கு ஒரு சிலை வைங்க. அதை ஸ்டாலின் திறந்து வைக்கணும். ஸ்கூல் புத்தகத்தில் செந்தில்பாலாஜியின் தியாகத்தை பாடமா வையுங்க…’ என்று கேட்கிறார்கள்.
ஒரு தியாகிக்கு இது கூட செய்யலைன்னா எப்படி..? உடனே நிறைவேற்றுங்க ஸ்டாலின்