News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கருணாநிதி உடலை பொது இடமான மெரீனாவில் அடக்கம் செய்யலாம் என்றால் ஆம்ஸ்ட்ராங்கை அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்வதில் என்ன பிரச்னை என்று அவரது ஆதரவாளர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் திருமுருகன் காந்தி, ‘’தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது உடலை அவரது சொந்த நிலத்தில், அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி இதுவரை தராமல் ஏன் திமுக அரசு காலம் தாழ்த்துகிறது? அரசு மருத்துவமனையில் காவல்துறையை குவித்து இந்த துயரமான சூழலில் எதை சாதிக்க நினைக்கிறது திமுக அரசு? தோழர் திருமா அவர்கள் இக்கோரிக்கையை காலையிலேயே வலியுறுத்திய பின்பும் ஏன் தாமதம்?

விஜயகாந்த், மூப்பனார் போன்றோரின் உடல் அவர்களது கட்சி நிலத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கும் பொழுது ஏன் ஒரு தலித்திய மக்களுக்கான தலைமைக்கு அனுமதி இதுவரை வழங்கப்படாமல் இருக்கிறது. கலைஞர் அவர்களை அடக்கம் செய்ய அதிமுக பாஜக அனுமதி மறுத்த போது, மே17 இயக்கம் திமுகவின் கோரிக்கையை வலியுறுத்தியது, போராடுவோம் என முழங்கினோம்.

சாமானிய மக்கள் தலைவர்களுக்கான உரிய மரியாதையை அளிக்கும் சூழலை திமுக அரசு ஏற்படுத்த தாமதிப்பது ஏற்புடையதல்ல? அரசு மருத்துவமனையில் தோழரது உடலை வாங்க மறுத்து தோழர்கள் போராடி நிற்கின்றனர். அவர்களுக்கு துணையாக சனநாயக சக்திகளின் குரல் எழும்ப வேண்டும். மே17 தோழர்கள் BSP தோழர்களோடு மருத்துவமனையில் நிற்கிறோம். அவசியமெனில் அவர்களோடு போராட்டத்தில் இணைவோம்’’ என்று ஆவேசம் காட்டியிருக்கிறார்.

இந்த நிலையில் இன்று நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாவனா, ‘’ஆம்ஸ்டிராங் உடலை அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம். வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது; ஹத்ராஸ் சம்பவத்தை பார்த்தீர்களா? போதுமான இடம் இல்லாமல் அனுமதி வழங்க நீதிமன்றம் தயாராக இல்லை’’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link