News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கூட்டணிக் கட்சிகள் என்றாலே வாயைப் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்பது தான் எழுதப்படாத சட்டம். ஆட்சியில் பங்கு என்று விடுதலை சிறுத்தைகளும், சாம்சங் விவகாரத்தில் கம்யூனிஸ்ட்களும் தி.மு.க.வுக்கு எதிராகக் குரல் கொடுத்தன. அதே வரிசையில் இப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் தி.மு.க.வுக்கு எதிராக கம்பு சுற்றியிருக்கிறார்.

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் என்பது சுற்றுச்சூழலுக்கு எதிரானது என்பதால் அச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும் அவர், ‘’தமிழ்நாட்டின் நீர்வளத்தையும், நிலவளத்தையும் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கான நாசகர சட்டமான தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023யை அமல்படுத்துவதற்கான சட்டவிதிகளை கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி அரசிதழில் தி.மு.க. அரசு வெளியிட்டுள்ளது. 21.04.2023 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில், வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023யை தாக்கல் செய்திருந்தார். சுற்றுச்சூழலுக்கு எதிரான அந்த மசோதாவை, அதே நாளில் எவ்வித விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை தரக்கூடிய எத்தனையோ சட்ட மசோதாக்களை காலம் தாழ்த்தி கிடப்பில் போட்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் எவ்வித விவாதமுமின்றி தாக்கல் செய்யப்பட்ட நாள் அன்றே இம்மசோதாவுக்கு 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்தார்.

அப்போதே, அச்சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும் வலியுறுத்தியிருந்தன. இதனையடுத்து, ஒரு ஆண்டுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்ட அச்சட்டத்தை தமிழ்நாடு அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த முடிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால் ஆகியன அமைந்துள்ள 100 ஹெக்டேருக்கு குறையாத நிலங்களைச் சிறப்புத் திட்டம் என்னும் பெயரில் வணிகம், உள்கட்டமைப்பு, தொழில்துறை ஆகிய திட்டங்களுக்காக ஒருங்கிணைத்து வாரிக்கொடுக்கவே தமிழ் நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்பு திட்டங்கள்) சட்டம் 2023 உருவாக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தால், நீர்நிலைகள் பாதுகாப்பிற்காக இருக்கக்கூடிய பிற சட்டங்கள், ஆணைகள் நீர்த்துப்போகும் வாய்ப்புகளையும் உருவாகும். மேலும், அச்சட்டம் விவசாயிகளின் வேளாண் உரிமையை முற்றிலும் பறிக்கிறது. இந்த சட்டவிதிகள் மூலம் பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட பல மக்கள் விரோத திட்டங்களை இனி அரசால் எளிதாக செயல்படுத்த முடியும். அதனை எதிர்த்து யாராலும் கேள்வியெழுப்ப முடியாது. இதன்விளைவாக, தமிழ்நாட்டின் நீர்வளமும் நிலவளமும் கடுமையாக பாதிக்கப்படும். வளர்ச்சி என்ற பெயரில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட்டுகளிடம் தாரைவாக்கப்படும். ற்கனவே, காலநிலை பருவ மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு எதிரான அச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

தி.மு.க. இல்லேன்னா அ.தி.மு.க. என்ற மனநிலை வந்திருப்பதாலே வேல்முருகன் இப்படிப் பேசுகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் இந்த அறிக்கையைக் கண்டு குஷியாகிறார்கள்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link