Share via:
தமிழக வெற்றிக் கழகம்
கட்சியின் முதல் மாநாடு வரும் 23ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருப்பதையடுத்து
முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தினம் தினம் ஆலோசனை
நடத்திவருகிறார்.
வழக்கமான அரசியல்
கட்சியின் மாநாடு போல் இல்லாமல் இதனை புதுமையாகவும் பிரம்மாண்டமாகவும் நடத்துவதற்கு
விஜய் தொடர்ந்து ஆலோசனை செய்துவருகிறார். இந்த மாநாட்டில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த
தலைவர்கள் இணைப்பு விழா நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டது. ஆனால், இதனை விஜய் புறக்கணித்துவிட்டாராம்.
அதேபோல், விஜய்க்கு
ஆதரவான ஒரு பெரிய நடிகர் பட்டாளம் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.
அவர்களுக்கும் தடை போடப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள் பங்குபெறும் சமயத்தில் தேவையில்லாமல்
விஜய் மீதான கவனம் ரசிகர்களுக்குச் சிதறிவிடும் என்பதாலே இந்த தடை போடப்பட்டு இருக்கிறதாம்.
இதற்காக நடத்திய
ஆலோசனையில், மாவட்ட வாரியாக மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களின் முழு விவரங்களையும்
சேகரிப்பதற்கு உத்தரவு போட்டிருக்கிறாராம். மாநாட்டுக்கு வருவோருக்கு அசைவம் மற்றும்
சைவ உணவு தடையின்றி கிடைக்க வேண்டும் என்றும் மது அருந்திவிட்டு வராமல் பார்த்துக்கொள்ள
வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அ.தி.மு.க.வின் முக்கியப்
புள்ளி ஒருவர் இதில் கலந்துகொள்ள அக்கறை காட்டினாராம். உதயநிதி டீமில் இருந்து யாராவது
ஒருவரை தூக்கினால் மட்டும் மேடையில் ஏற்றலாம், வேறு யாருக்கும் அனுமதி கொடுக்க வேண்டாம்
என்று விஜய் சொல்லிவிட்டாராம். மாநாட்டுக்கு வரும் வேன், வாகனங்கள் மற்றும் செலவுக்கு
எவ்வளவு பணம் தேவைப்படும், அதனை எப்படி நிறைவேற்றுவார்கள் என்றும் பேசப்பட்டிருக்கிறது.
விஜய் ரொம்பவே பிஸி.
மாநாட்டில் ஒரு புதுமை இடம் பெறும். அதை இப்போது சொல்ல முடியாது என்கிறார்கள் நிர்வாகிகள்.