தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரமணி. இவருக்கு 26 வயது . இந்த நிலையில் ரமணி வழக்கம்போல் இன்று (நவம்பர் 20) வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்த போது திடீரென வகுப்பறைகுள் நுழைத்த நபர், ரமணியை கத்தியால் சரமாரியாக குத்தினார் .

இதில் நிலைகுலைந்து போன ஆசிரியை ரமணி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை சக ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி உயிரிழந்தார்.

அதை தொடர்ந்து ரமணியை குத்திக்கொன்றதாக சின்னமலை கிராமத்தை சேர்ந்த மதன்குமார் என்ற 28 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், ரமணியை மதன்குமார் ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார் .ஆனால் ரமணி மதன்குமாரின் காதலை ஏற்க மறுத்துள்ளார் .இதனால் ஆத்திரம் அடைந்த மதன்குமார் ரமணியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அரசு பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது .

இந்நிலையில் இக்கொலை சம்பவம் தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link