Share via:
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விவகாரத்தில்
கவர்னருக்கு எதிராக ஆளும் தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பா.ஜ.க.வின் கூட்டணிக்
கட்சியான பா.ம.க. உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் கவர்னரை எதிர்த்து ஒன்றுகூடி போராடும்
நேரத்தில் நாம் தமிழர் சீமான் மட்டும் கவர்னருக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பது அவர்களுடைய
கட்சிக்குள்ளே முணுமுணுப்பை உருவாக்கியிருக்கிறது.
கடந்த வாரமே நந்தன் திரைப்பட விழாவில் தமிழ்த்தாய்
வாழ்த்து பாடப்பட்டது. அப்போது சீமானுக்காக அந்த பாடலில், “தெக்கணமும் அதிற்சிறந்த
திராவிட நல் திருநாடும்” என்ற வரிகள் விடப்பட்டன. ஆனால், சீமான் வழக்கம்போல் இப்படி
தமிழ் விரோதச் செயல் செய்வார் என்பதால் அதனை யாரும் கண்டுகொள்ளவே இல்லை.
சீமான் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை
என்பதாலே தைரியமாக கவர்னர் அந்த விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிரார். ஆனால், இப்போது
கவர்னருக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு நிலை நிலவுகிறது. இந்த நேரத்தில் கவர்னருக்கு
ஆதரவாக இருப்பது ஒரே ஒருவர் மட்டுமே அவரே சீமான். அவர் திராவிட நாடு என்பதற்குப் பதிலாக
தமிழ்நாடு என்று பாட வேண்டும் என்று இப்போது குரல் எழுப்புகிறார்.
தமிழக மக்கள், தமிழக கட்சிகள் அனைவரும் ஒரு வழியில் நிற்கிறார்கள்.
பா.ஜ.க.வினரும் திராவிடம் என்பது தவறாக விட்டுவிட்டதாகச் சொல்கிறார்களே தவிர, அதனை
எதிர்க்கவில்லை. இந்த நிலையில் சீமான் மட்டும் வேண்டுமென்றே பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுக்கலாமா
என்று அவரது கட்சியினரே வேதனைப்படுகிறார்கள்.
அந்த கூட்டத்தில் கவர்னர் இந்தியாவின் 28 மாநிலங்களில 27 மாநிலங்களில்
மும்மொழித் திட்டம் பின்பற்றப் படுவதாகk கூறியிருப்பதற்கும் கடும் எதிர்ப்பு தோன்றியிருக்கிறது.
இதற்கு காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரம், ‘’பீகார்,
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட் — பல அரசுப்பள்ளிகளில்
ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை, ஆங்கில வகுப்புகளை நடத்துவதில்லை, அப்படி நடந்தாலும்
வகுப்புகளில் மொழிப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை பல்லாயிரம் ‘ஆங்கிலம்
கற்ற’ மாணாக்கர்கள் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் பேச அல்லது எழுத இயலாதவர்கள் என்பதை
நான் நேரடியாக அறிவேன் அங்கு மும்மொழித் திட்டம் செயல்பாட்டில் இல்லை. ஆழமாகப் பார்த்தால்,
அங்கு ‘ஒரு மொழித் திட்டம்’ தான் செயல் படுத்தப்படுகிறது இரண்டாவது மொழி என்ற பெயரில்
இந்தி மொழிக்கு நெருங்கிய தொடர்புள்ள சமஸ்கிரதம், பஞ்சாபி, போஜ்புரி போன்ற மொழிகள்
ஒப்புக்காக ‘கற்பிக்கப்படுகிறது’
தென் மாநில மொழிகள் — தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் —
95 சதவீதப் பள்ளிகளில் கற்றுத்தரப்படுவதில்லை, அதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை
என்பதே உண்மை தமிழ் நாட்டில் மாநில அரசுப் பள்ளிகளைத் தவிர தனியார் பள்ளிகள்,
CBSE, ICSE பள்ளிகள் மற்றும் மத்திய அரசு நடத்தும் KV பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது
என்பது எல்லோரும் அறிந்த செய்தி தமிழ்நாட்டில் இந்தி மொழியைக் கற்க விரும்பும் மாணவ,
மாணவிகளுக்கு எந்தத் தடையும் கிடையாது. தட்சிண பாரத இந்தி பிரசார சபையின் பல நிலைத்
தேர்வுகளை ஆண்டு தோறும் தமிழ்நாட்டில் பல்லாயிரம் மாணவர்கள் எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள்
என்பது எல்லோரும் அறிந்த செய்தி மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உண்மைச் செய்திகளின் அடிப்படையில்
அரசின் கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
இதற்கும் சீமான் முட்டுக்கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.