Share via:
சினிமாவில் விஜய் டபுள் ஆக்ட் செய்தால் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. அதற்காகவே அவ்வப்போது டபுள் ஆக்ட் படம் கொடுப்பார். ஆனால், சமீபத்தில் அப்படி டபுள் ஆக்ட் கொடுத்த கோட் தோல்வியைத் தழுவியிருக்கிறது. சினிமாவைப் போலவே அரசியலிலும் டபுள் ஆக்ட் போடுகிறார் விஜய் என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருத்து சொல்கிறார்கள்.
திராவிடத்தைத் தூக்கிப் பிடிக்கும் மாடலும் தமிழ்த்தேசியத்தைத் தூக்கிப் பிடிக்கும் மாடலும் தமிழகத்தில் சூப்பர் ஹிட் ஆக போய்க்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் திராவிடமும் தேசியமும் இரண்டு கண்கள் என்று ஒரு புது ரூட்டில் பயணம் தொடங்கினார் விஜய். இதற்கு நாம் தமிழர் சீமான் கடுமையாக ரியாக்ட் செய்தார். ‘ஏதாவது ஒரே பக்கம் நில்லு இல்லைன்னா லாரி அடிச்சுடும்’ என்று எச்சரிக்கை செய்தார்.
இதையடுத்து இப்போது எங்களுடைய கட்சிக் கொள்கை, மதசார்பற்ற சமூகநீதி என்று கூறியிருக்கிறார். அதாவது திராவிடமும் இல்லை தமிழ்த்தேசியமும் இல்லை. அவற்றை தனித்தனியாக ஏற்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என்று கூறுகிறார்.
தமிழகத்தையே மிரட்டும் அளவுக்கு மக்களைத் திரட்டும் சக்தி விஜய்யிடம் இருக்கிறது. இந்த நிலையில் தேவையில்லாத குழப்பம் எதற்கு..? ஏதேனும் ஒரு வழியில் சென்று மக்களுக்கு நல்லது செய்யுங்கள். ராஜாவா இருக்கணும் அதேநேரம் டெல்லிக்குக் கூஜாவும் தூக்கணும் என்றால் எப்படி சரியாக இருக்கும் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
அதானே, தனி வழியில் ஜோரா நடந்துவாங்க விஜய்.