Share via:
‘கடவுள் இல்லை, கடவுளை
நம்புபவன் காட்டுமிராண்டி’ என்ற சொன்ன ஒரு கூட்டம் தான் இன்றைக்கு முருகப்பெருமானின்
மாநாட்டை நடத்துகிறார்கள். அவர்களுடைய நோக்கம் ஆன்மிகம் அல்ல, ஓட்டு வங்கி தான் என்று
பா.ஜ.க.வினர் எதிர்ப்பு காட்டியிருக்கும் நிலையில், பழனியில் அனைத்துல முத்தமிழ் முருகன்
மாநாடு 2024 என்ற பெயரில் ஒரு மாபெரும் கொண்டாட்டத்தை இந்து அறநிலையத் துறை நடத்தி
வருகிறது. தீபாவளி பண்டிகைக்குக் கூட வாழ்த்து சொல்லாத ஸ்டாலின், இந்த விழாவுக்கு வாழ்த்து
கூறியிருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின்,
‘’எல்லோருக்கும் எல்லாம் என்ற நமது திராவிட மாடல் அரசில், நாள்தோறும் அறப்பணிகளால்
ஆன்மீகப் பெரியோர்களின் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் இந்து அறநிலையத் துறை
சார்பில் சார்பில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள்’’
என்று கூறியதுடன் நில்லாமல் விழாவை தொடங்கி வைத்தும் இருக்கிறார். இந்த விழாவில் சேகர்பாபு
மட்டுமின்றி ஐ.பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்ட தி.மு.க. அமைச்சர்களும் முக்கியப் பிரமுகர்களும்
கலந்துகொண்டிருக்கிறார்கள்.
கோயிலிலும் மத நம்பிக்கையிலும்
அரசு தலையிடக் கூடாது என்பதை கொள்கையாக வைத்திருக்கும் திராவிடர் கழகத்தினர் பேருக்காக
ஒரு அறிக்கை விட்டதோடு இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன், ‘’மதத்திலிருந்து அரசு விலகி நிற்க
வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின்
அடிப்படை ஆகும். எந்த ஒரு
மதத்தையும் பரப்புவது, பின்பற்றுவது அரசின் பணியாக இருக்கக்
கூடாது. மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பேணி
பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க
வேண்டும் என ஆர்எஸ்எஸ்
– பாஜக பரிவாரம் துடிக்கிறது. கோவில்
சொத்துக்களை கொள்ளையடிப்பதும், சாதிய படிநிலையை பாதுகாப்பதுமே
அவர்களின் நோக்கம்.
இதை முறியடிக்கும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை
பணிகளை மேற்கொள்வது நல்லது. மத அடிப்படையிலான
விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது
தவிர்க்கப்பட வேண்டும்..’’ என்று விழா முடிவடையும் நேரத்தில் ஒரு எதிர்ப்பை
பதிவு செய்திருக்கிறார்.
சொல்லுவதை தைரியமா
உறுதியா சொல்லுங்க தோழர், இப்படி பம்மிக்கிடே பேசுறது எதுக்கு என்று அவரது கட்சியினரே
கிண்டல் செய்கிறார்கள்.