News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

எம்.பி. பதவியை தூக்கியெறிந்துவிட்டு எம்.எல்.ஏ. தேர்தலில் நிற்கப் போகிறேன் என்று அறிவித்தார். அதேபோல் பாண்டிச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் 4 தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்று அறிவித்தார். இதையெல்லாம் இன்று திருத்தியெழுதியிருக்கிறார்.

பாண்டிச்சேரியில் 3 தொகுதிகளில் விசிக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன் என்று கூறிவிட்டார். அதேபோல், ‘பறையன் பானை’ என எழுதப்பட்டிருந்த தண்ணீர் பானையை உடைத்தெறிந்த எல்.இளையபெருமாள் மகன் ஜோதிமணி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காட்டுமன்னார்கோயிலில் பானைச் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்று அறிவித்தார். இந்த ஜோதிமணி காங்கிரஸ்காரர் என்பதால் அவரே அதிர்ந்துவிட்டார்.

என்னாச்சு திருமாவுக்கு அவரது ஆதரவாளர்களே தவிக்கிறார்கள். இதுகுறித்து அவர்கள், ‘’எம்.பி.யாக இருந்துகொண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தது தவறான ஒன்று என்பதால் வாபஸ் வாங்கினாரா? காட்டுமன்னார் கோயில் தொகுதி விஜய் பிரிக்கும் வாக்குகள் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று கருதி விலகுகிறாரா? தேர்தல் களம் மாறலாம் என்று வார்த்தையை விட்டு முதல்வரை கோபப்படுத்தியதால் வாபஸ் வாங்குகிறாரா? தன்னிச்சையாக காங்கிரஸ் வேட்பாளருக்கு எப்படி ஒதுக்கியுள்ளார்? அல்லது இடைக்கால ஏற்பாடாக திமுகவே பேசி தொகுதியை காங்கிரசுக்கு மாற்றி கொடுத்ததா? அல்லது பெரியவர் இளையபெருமாள் அவர்கள் மகன் என்பதால் தானே முன்வந்து கொடுத்தாரா?’’ என்று குழம்புகிறார்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாடு களச்சூழல் மாறும், திமுக கூட்டணி கட்சிகளை பிஜேபி உடைக்க முயலும்; ஆதலால் நான் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என்று திருமா பேசியதை திமுக விரும்பவில்லை. அதனால்தான் இந்த முடிவு என்கிறார்கள்.

நிஜமா திருமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link