Share via:
தனக்கு ஒரு பிரச்னை என்று வந்ததும், இந்த நாடே வேண்டாம் என்று
இந்தியாவை விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் நித்தியானந்தா. அவருக்கென கைலாசா என்ற தனி நாட்டை
உருவாக்கியிருக்கிறார். அதோடு கைலாசா நாட்டுக்கு என தனியாக கொடி, பாஸ்போர்ட், தனி நாணயங்கள்
உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தியதோடு கைலாசா நாட்டுக்கான சர்வதேச தூதர்களையும் அறிவித்தார்.
இந்த நிலையில் கைலாசாவில் குழப்பம் நேர்ந்துவிட்டது, நித்தியானந்தா
படுத்த படுக்கையாக இருக்கிறார், எந்த நேரமும் மரணம் அடைந்துவிடுவார் என்றெல்லாம் பேச்சுகள்
எழுந்தன. ஆனால், அதன் பிறகு திடீரென ஆன்லைனில் தோன்றினார் நித்தியானந்தா. நான் உயிரோடு
இருக்கிறேன், ஆனால், உயிருடன் இருக்கிறேனா என்று சந்தேகமாக இருக்கிறது என்று வதந்திகளை
கிண்டல் செய்தார்.
இப்போது மீண்டும் ஒரு முறை நித்தியானந்தா மரணம் அடைந்திருப்பதாக
செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பரபரப்பு அதிகரித்த நிலையில், கைலாசாவில் இருந்து,
‘’நித்யானந்தாவுக்கு எதிரானவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்ததால், அவர்கள் தவறான தகவல்கள்
பரப்பும் போக்கிற்கு மாறியுள்ளனர். மக்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் ஏப்ரல்
2ம் தேதி மாலை 7 மணி அளவில் நித்யானந்தா நேரலையில் தோன்றுவார் என்று கூறியுள்ளனர்.
அதேநேரம் இதுகுறித்து நித்தியானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில்,
‘இன்னமும் குறைந்தபட்சம் 150 ஆண்டுகள் உயிரோடு இருப்பேன்; இந்து எதிரிகள், இந்து வெறுப்பாளர்கள்
என்னுடைய நேரத்தை வீணடிக்கின்றனர். என் மீது அவதூறு பரப்புபவர்களை நான் எதுவும் செய்யப்போவது
இல்லை. மகனுங்களா.. நான் 126 வயதில்தான் பேக் பண்ணிட்டு போலாம்னு இருந்தேன். வீணாப்
போனவனுங்களா..ஏகப்பட்ட டைம் வேஸ்ட் பண்ணிட்டானுங்க.. இதுக்கு மேல தொடர்ந்து வம்பு செய்தீர்கள்
என்றால் என் வாழ்நாளை 1,000 வருஷமாக்கிடுவேன்டா.. வேணாம். வம்பு பண்ணாதீங்க” என கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், நித்தியானந்தவின் தலைமைப் பீடத்தைக் கைப்பற்றுவதில்
ரஞ்சிதா வெற்றி அடைந்துவிட்டார் என்றும் விரைவில் ரஞ்சிதாவை தலைமையில் அமரவைத்து நித்தியானந்தா
அறிவிப்பு வெளியிடுவார் சிலர் சொல்கிறார்கள். தன்னை மக்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காக
அவரே அவ்வப்போது இப்படி புரளி கிளப்புவதாகச் சொல்கிறார்கள்.
இத்தனை குழப்பத்துக்கு நடுவிலும் நித்தி சிரித்துக்கொண்டே காட்சி
தருவதற்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு என்கிறார்கள். அதோடு நேபாளமே அந்த கைலாசா என்றும்
அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். முழு உண்மையும் வெளிவரட்டும்.